கிறிஸ்து எல்லாத் தலைமுறைகளிலும் மாறாதவராகவே அடையாளம் காணப்படுகிறார் CHRIST IS IDENTIFIED THE SAME IN ALL GENERATIONS 64-0415 புதன்கிழமை மாலை, ஏப்ரல் 15, 1964 மெக்கே அரங்கம், டாம்பா, புளோரிடா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் கிறிஸ்து எல்லாத் தலைமுறைகளிலும் மாறாதவராகவே அடையாளம் காணப்படுகிறார் (64-0415) நீங்கள் அமரலாம். இன்றிரவு இங்கே இருப்பதைக் கண்டிப்பாக நான் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். எனக்குத் தெரிந்தவரை, ஒரு கூட்டத்திற்காக நாங்கள் டாம்பாவில் இருப்பது இதுவே முதல் முறையாகும். உங்களைச் சந்திக்க இங்கு வர வேண்டும் என்று நான் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்திருக்கிறேன். இது மிகவும் அழகான ஒரு இடம், மேலும் தெருவில் நாம் சந்திக்கும் மக்கள்... மிகவும் நல்ல மக்கள். மேலும் நாங்கள்... இங்கே ஒரு சிறப்பான கூட்டம் நடக்கும் என்று நான் எப்போதும் நினைத்திருந்தேன். எனவே நாங்கள் இங்கு வரப்போகிறோம் என்பதைச் சமீபத்தில் தான் தெரிந்துகொண்டோம், ஆகையால் இந்தச் சிறந்த வாய்ப்பிற்காக நாங்கள் ஜெபித்துக் கொண்டும் காத்திருந்துக்கொண்டும் இருந்தோம். அது இறுதியாக வந்துவிட்டது. 2 இப்போது நாங்கள், இங்கே வெகு காலம் இருக்கப் போவதில்லை, வெறும் நான்கு இரவுகளும் ஞாயிற்றுக்கிழமை மதியமும் மட்டுமே இருப்போம். மேலும் இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவும், அவருடைய ராஜ்யத்தை மேலும் விரிவுபடுத்த உதவவும் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க நாங்கள் முயற்சிக்கிறோம்; நாங்கள் புறப்படும்போது, பங்குபெறும் ஒவ்வொ ருவரும், ஒவ்வொரு சபையும் பயனடையும் என்று நம்புகிறோம். அதுமட்டுமல்ல, எங்கள் தங்குதலால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சபைகளும் பயனடையும். 3 மேலும் உங்களைச் சந்திப்பதாலும், உங்களுடன் பேசுவதாலும், உங்களுக்குப் பிரசங்கிப்பதாலும், உங்களுடன் சேர்ந்து ஜெபிப்பதாலும் நாங்களும் பயனடைவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் எத்தனை ஆத்துமாக்களை இரட்சிக்க முடியும் என்பதைப் பார்ப்பதற்காகவும், பின்னர் வியாதியுள்ள வர்களாகவும் தேவையுள்ளவர்களாகவும் இருக் கும் மக்களுக்காக ஜெபிப்பதற்காகவும் நாங்கள் இங்கே இருக்கிறோம். 4 நாங்கள் இப்போது ஒரு மருத்துவரின் இடத்தை எடுக்க முயற்சிக்கவில்லை, ஏனென்றால் நாங்கள் மருத்துவர் அல்ல. நாங்கள்—நாங்கள் அவருடைய நோயாளிக்காக ஜெபிக்க மட்டுமே உரிமை கொண்டாடுகிறோம், தேவன் அவர்களைக் குணமாக்குவார். எனவே அவர் அதைப் பாராட்டுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் எனவே இப்போது எங்களுடைய—எங்களுடைய... 5 இந்தக் கூட்டங்களில் நாங்கள் செய்ய முயற்சிப்பது இயேசு கிறிஸ்துவை உயர்த்துவதே ஆகும். நாங்கள் இயேசு கிறிஸ்துவை உயர்த்த முயற்சிக்கும்போது அது உங்களில் எவரையும் புண்படுத்தாது என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் அதற்காகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். 6 இப்போது, ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒவ்வொரு விசுவாசியும் அவரைக் காணவும், அவரைத் தொடர்புகொள்ள ஏதாவது ஒரு வழியைப் பெறவும், அவரைப் பற்றி அதிகமாகப் பெறவும், அவரை அதிகமாக விசுவாசிக்கவும் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம், ஒன்றாகச் சேர்ந்து, அந்த நோக்கத்திற்காக நாம் இணைந்து வேதவசனங்களை விசுவாசிக்க முடியுமா என்று பார்ப்பதற்காகவே. 7 இப்போது, இங்கே இருக்கும் என் சகோதரர்களாகிய ஊழியக்காரர்களின் கை குலுக்கி, இந்த முகாமை ஆதரிக்கும் இந்த ஊழியக்காரர்களின் குழுவைக் காண்பதில் நான்—நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் புதிதாக எதையும் கொண்டுவர இங்கே வரவில்லை, மாறாக என்னுடைய வலையை அவர்களுடைய வலையோடு இணைக்கவே வந்திருக்கிறேன். 8 உங்களுக்குத் தெரியும், இயேசு சொன்னார், “பரலோகராஜ்யம் ஒரு மனுஷன் வலையை எடுத்துக்கொண்டு ஏரிக்குச் சென்று, அதைப் போட்டு, வலையை இழுத்தபோது, அந்த வலையில் சகலவிதமானவைகளும் இருந்ததற்கு ஒப்பாயிருக்கிறது.” 9 இப்போது, அப்படியானால் நாங்கள் மீனவர்கள். மேலும் அந்த ஏரியில் தேவன் விரும்பும் ஏராளமான மீன்கள் உள்ளன. மேலும் கடைசி மீன் வெளியே வந்ததும், அதன்பிறகு எல்லாம் முடிந்துவிடும். இப்போது அந்தக் கடைசி மீன் எப்போது அதிலிருந்து வெளியே எடுக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது. மேலும் இப்போது நான் இங்கே இருக்கிறேன்... ஒரு வலை, இவ்வளவு அடி தூரம் எட்டும் என்று சொல்வோம், மற்றொரு வலை இவ்வளவு அடி தூரம் எட்டும். பிறகு நாம் நம்முடைய வலைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், என்னுடையதை அவர்களுடைய தோடு நான் இணைப்பேன், நாம் இன்னும் சற்று தூரம் எட்ட முடியும், ஒருவேளை, அதில், மற்றபடி நாம் பிடிக்க முடியாத சிலவற்றைப் பிடித்துக்கொள்ளலாம். 10 கர்த்தருடைய வருகையை நாமெல்லாரும் விசுவாசிக்கிறோம், அவருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று. அது இப்போது சமீபமாயிருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் எந்த நேரத்தில் வந்து சேருவார் என்பது எங்களுக்குத் தெரியாது. இதைக் கருத்தில் கொண்டு, ராஜ்யத்தை மேலும் விரிவுபடுத்தவும், அந்தக் கடைசி நபரையும் ராஜ்யத்திற்குள் இரட்சிக்கவும், எங்களுக்குத் தெரிந்த எல்லா முயற்சிகளையும் எடுக்க நாங்கள் விரும்புகிறோம். மேலும் அந்தக் கடைசி நபர் இரட்சிக்கப்படும்போது, அங்கே—அங்கே கூடுதலாக ஒருவர் இருக்கமாட்டார். அது சரியாக அவ்வளவு பேர் மட்டும்தான் இருக்கும். மேலும் அந்தக் கடைசி நபர் உள்ளே கொண்டுவரப்படும்போது, கிறிஸ்துவின் சரீரம் முழுமையடைகிறது, இரகசிய வருகை (Rapture) வரும். 11 எனவே அந்த நாளுக்காக நாங்கள் ஏங்குகிறோம், இப்போது நாம் இருக்கும் இந்த இடத்தை விட்டு வெளியேற, ஏனென்றால் இது நிச்சயமாக ஒரு—ஒரு தொற்றுநோய் பரவும் இடம், அது நமக்குத் தெரியும், வியாதி, நோய், மற்றும் ஏமாற்றங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்தது. மேலும், ஆஹா, செல்வதற்கு இதைவிட ஒரு சிறந்த இடம் இருக்கும்போது, யார் இங்கே தங்க விரும்புவார்கள்? "12 எனவே நாங்கள்—நாங்கள் ஒவ்வொரு ஆத்துமாவையும் இரட்சிக்க முயற்சிக்கிறோம், அதனால்தான் இயேசு வர முடியும். மேலும் உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னே ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயரைக் கொண்ட அந்தக் கடைசி நபர் வரும்வரை அவர் வரமுடியாது; அந்தப் பெயர் அழைக்கப்படும்போது, அதுதான் கடைசி நபராகும். அவர் மீட்டுக்கொள்ள, திரும்பக் கொண்டுவர வந்தார். மீட்பது என்றால் ""திரும்பக் கொண்டுவருவது"". மேலும் அவர் அந்தக் கடைசி நபரை உள்ளே கொண்டு வரும்போது... அவர் இன்றிரவு தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருந்து, தமது மத்தியஸ்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். மேலும் உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னே தேவனால் காணப்பட்டு, அறியப்பட்டு, மீட்கப்பட்டிருந்த அந்த கடைசி ஆத்துமா இரட்சிக்கப்படும்போது; அந்தக் கடைசி ஆத்துமா இரட்சிக்கப்படும்போது, அது புஸ்தகத்தை மூடுகிறது. அப்பொழுது ஆட்டுக் குட்டியானவர் வெளியே வந்து, சிங்காச னத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்தி லிருந்து புஸ்தகத்தை வாங்குகிறார். பின்னர் அது... அவர் அப்போது வருகிறார், அவர் பூமிக்கு வருகிறார். தேவன்... என்று நான் நினைக்கிறேன்." "13 பல நேரங்களில் நாம் பதற்றமடைந்து, ""சரி, இது இப்படித்தான் இருக்க வேண்டும், இதை நாம் இப்படிச் செய்ய வேண்டும் அல்லது அப்படிச் செய்ய வேண்டும்"" என்று சிந்திக்கத் தொடங்குகிறோம். அதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை; அவர் நம்மை எப்படி வழிநடத்துகிறாரோ அந்த நம்முடைய பங்கை மட்டும் செய்தால் போதும். நினைவில் கொள்ளுங்கள், எதுவும் ஒழுங்குதவறிப் போகவில்லை." 14 இன்றிரவு நாம் இங்கே அமர்ந்தி ருப்போம் என்பதை மாபெரும் சர்வ வல்லமையுள்ள தேவன் உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்பாகவே மிகத் துல்லியமாக அறிந்திருக்கிறார். அவர் அனந்தமானவர் என்றால், அவர் அறிந்திருக்க வேண்டும். எனவே, எல்லாவற்றையும் அறியாமல் அவர் அனந்தமானவராக இருக்க முடியாது. மேலும் அவருடைய முன்னறிவின்படி இந்தக் கூட்டம் இங்கே நடைபெறும் என்பதை அவர் அறிந்திருந்தார்; ஒருவேளை அவரால் முன்-நியமிக்கப் பட்டிருக்கலாம், அவருடைய ராஜ்யத்திற்குள் இன்னும் சிலரைக் கொண்டுவர இது அப்படிப்பட்டதே என்று நான் நம்புகிறேன். "15 ஆதியிலே தேவன், அவர் வெறும் தேவனாகவே இருந்தார். உண்மையில் அவர் தேவன் அல்ல; அவர் வெறும் நித்தியமானவர். தேவன் என்பது ஒரு... நமது ஆங்கில வார்த்தையான தேவன் என்பதற்கு ""ஆராதனைக்குரிய ஒரு பொருள்"" என்று பொருள். மேலும் அவரை ஆராதிக்க எதுவும் இருக்கவில்லை. அவர் சுயமாய்-இருக்கிறவராக, எலோஹீமாக இருந்தார். எனவே அவரை ஆராதிக்க எதுவும் இருக்கவில்லை, ஆகையால் அவர் மாபெரும் நித்தியமானவராகவே இருந்தார்." 16 ஆனால் அவருக்குள் பண்புகள் இருந்தன. மேலும் பண்புகள் என்பவை சிந்தனைகளாகும். எதையாவது பேசுவதற்கு முன் நீங்கள் அதை எப்படிச் சிந்திக்க வேண்டுமோ, அதேபோல; பின்பு நீங்கள் பேசும்போது, அது ஒரு வார்த்தையாக மாறுகிறது. மேலும் பின்பு அவர் நித்தியமானவர், அவருக்குள் பண்புகள் இருந்தன. மேலும் அவர் அதைப் பேசினார், அது வார்த்தையாக இருந்தது, மேலும் வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது. மேலும் வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, அது தேவன் பொருளாவதைக் குறிக்கிறது. "17 எனவே, எல்லாம் சரியான நேரத்தில்தான் நடக்கிறது, அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர் ஒருபோதும் தமது சத்துரு தம்மை மேற்கொள்ள அனுமதிக்க மாட்டார். மக்களைச் சோதனைக்குள்ளாக்க, தமது—தமது பிள்ளையைச் சோதிக்க, மற்றும் பல காரியங்களுக்காக அவர் சத்துருவைச் சில காரியங்களைச் செய்ய அனுமதிப்பார். ""ஏனென்றால் தேவனிடத்தில் வரும் ஒவ்வொரு மகனும் தேவனால் சிட்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட வேண்டும்."" ஆகவே, நம்மால் சிட்சையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் வேசிப்பிள்ளைகளாக ஆகிவிடுவோம், நாம் அறிக்கை செய்வதைப் போல இருக்க மாட்டோம்." 18 எனவே, இந்த வாரம், இந்த வாரத்தின் மீதமுள்ள நாட்களில், நாம் உண்மையாகவே ஆபிரகாமின் சந்ததியைப் போல, நாம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே நம் விசுவாசத்தை அங்கே வைப்போம். நாம் தேவனை விசுவாசிப்போம். பின்னர் நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்து, உதவி செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மேலும் நாங்கள் புறப்படும்போது, இந்த நாடு முழுவதும் இங்கு ஒரு பழைய-காலத்து எழுப்புதல் ஏற்படும் என்றும், பழைய-காலத்து எழுப்புதலுக்காக எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து இந்தச் சபைகளை நிரப்புவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். 19 கடந்த பதினைந்து, பதினாறு ஆண்டுகளாக ஒரு மாபெரும் எழுப்புதலை நாம் கடந்து வந்திருக்கிறோம். நாம் சிறப்பான கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். எனக்கு வரலாறு தெரிந்தவரையில், இது எல்லா வரலாற்றுச் சாதனைகளையும் முறியடித்துள்ளது. பொதுவாக ஒரு எழுப்புதல் சுமார் மூன்று ஆண்டுகள் நீடிக்கும், ஆனால் இது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலும் இப்போது எழுப்புதல் தீ தணிந்து வருகிறது, மக்களின் உற்சாகம் குறைந்துகொண்டே வருகிறது, அதை நீங்கள் பார்க்க முடியும். ரோமில் உள்ள—வெஸ்டாவின் பழைய தேவாலயத்தில், தீ அணைந்ததும், மக்கள் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால் எங்களால் முடிந்த ஒவ்வொரு குன்றின் மீதும் இந்தத் தீயை மீண்டும் எழுப்ப நாங்கள் முயற்சிக்கிறோம். என்னால் அதைச் செய்ய முடியாது, எந்த ஊழியக்காரராலும் முடியாது; நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஜெபத்தில், விசுவாசித்து, தேவனை நம்பி, அவருடைய வருகைக்காக நாம் காத்திருக்கையில் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து தமது மக்களை ஆசீர்வதிப்பதைக் காண வேண்டும். 20 இப்போது, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதில் எனது நோக்கம், அதைப் பற்றி நான் இப்போது பேசப் போகிறேன். வியாதியஸ்தர்களுக்கான ஜெபம் என்பது, இப்போது, அதற்காகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று சொல்ல நாங்கள் முயற்சிக்கவில்லை, நாங்கள், நாங்கள் வந்திருக்கும் காரியங்களில் ஒன்று, ஆனால் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது ஒரு சிறிய காரியமே. மேலும் ஒரு சிறிய காரியத்தை வைத்து நீங்கள் ஒருபோதும் பெரிய காரியத்தை சாதிக்க முடியாது, அது நமக்குத் தெரியும். எனவே, ஆனால் இயேசு பயன்படுத்தினார், அவர்கள் மதிப்பிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், அவருடைய ஊழியத்தில் சுமார் எண்பத்தாறு சதவீதம் வியாதியஸ்தர்களுக்கான ஜெபமாகவும், வியாதியஸ்தர்களைக் குணமாக்கு வதாகவும் இருந்தது, ஏனென்றால், அதில், அது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. 21 மேலும், பின்பு, ஒவ்வொரு அடையாளத்தின் பின்னாலும் ஒரு சத்தம் இருக்கிறது. மேலும் அது எப்படி வேதப் பூர்வமான அடையாளமாக இருக்க வேண்டுமோ, அதேபோல அந்தச் சத்தமும் வேதப்பூர்வமான சத்தமாக இருக்க வேண்டும். மேலும் பின்பு அந்த அடையாளம் ஒரு சத்தத்தோடு சேர்ந்திருக்கிறது. மோசே, எகிப்துக்குச் சென்றபோது நடந்ததைப்போல; முதல் அடையாளத்தின் சத்தம், இரண்டாவது அடையாளத்தின் சத்தம். மேலும் தேவனால் நடக்கும் ஒவ்வொரு பெரிய காரியமும், ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறதோ, அந்த அடையாளத்தைத் தொடர்ந்து ஒரு சத்தம் வருகிறது. யோனாவைப் போல, அவர் திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து விடுவிக்கப் பட்டபோது, அது ஒரு அடையாளமாக இருந்தது; பின்னர் அவருடைய சத்தம், “மனந்திரும்புங்கள், அல்லது நாற்பது நாட்களில் நீங்கள் அழிந்துபோவீர்கள்” என்பதாக இருந்தது. எனவே அடையாளத்தோடு எப்போதும் ஒரு சத்தம் சென்றுகொண்டே இருக்கிறது. "22 இப்போது, நாங்கள் செய்ய முயற்சிப்பது என்னவென்றால்—மக்கள் கர்த்தராகிய இயே சுவை விசுவாசிக்கவும், கைகள் வைக்கப் படாமலேயே, அவரை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முயற்சிப்பதே ஆகும். இப்போது, ""வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்"" என்று சொல்லும் ஒரு வேதவசனம் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். மேலும் அந்த வேதவசனத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட முயற்சிக்கவில்லை, ஏனென்றால் அதுதான் இயேசு கிறிஸ்து சபைக்குக் கொடுத்த கட்டளை, ""வியாதியஸ்தர்மேல் கைகளை வையுங்கள்"" என்று. ஆனால், நீங்கள் என்னைப் பொறுத்துக் கொள்வீர்களானால், அது பெரும்பாலும் ஒரு யூத பாரம்பரியத்தைப் போலவே இருந்தது. இப்போது, வியாதியாய்க் கிடந்து மரித்துப்போன—அந்தச் சிறுமியை, யவீருவின் மகளை நினைவுகூருங்கள். அவர் சொன்னார், “நீர் வந்து, என் பிள்ளைமேல் உமது கைகளை வையும், அப்பொழுது—அப்பொழுது அவள் பிழைப்பாள்.”" 23 ஆனால் ரோம நூற்றுக்கதிபதி, ஒரு புறஜாதியான், சொன்னான், “நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் பிழைப்பான்.” 24 மேலும் இயேசு திரும்பி, “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை” என்றார். 25 பாருங்கள், புறஜாதியாரின் வழி அவரை விசுவாசிப்பதே ஆகும், அவரை முற்றிலுமாக விசுவாசிப்பதே. இப்போது, நாங்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைக்கிறோம், நிச்சயமாக, நாங்கள் செய்கிறோம். ஆனால் நாங்கள் வேதவசனங்களின்படி, இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்ற—உண்மையை—கொண்டுவர முயற்சிக்கிறோம்; பின்பு நீங்கள், விசுவாசத்தினாலே, மேலே சென்று நீங்களே அவரைத் தொடும்போது, பாருங்கள், பெரும்பாடுள்ள ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டதைப்போல. “சரி,” நீங்கள் சொல்கிறீர்கள், “அவர் இங்கே இருந்திருந்தால், நான் அவரைத் தொட்டிருப்பேன்.” 26 வேதாகமம் சொல்கிறது, எபிரெயர் 3-ல், “அவர் இப்போது நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய ஒரு பிரதான ஆசாரியராக இருக்கிறார்.” அப்பொழுது அவரைத் தொட முடிந்தது போலவே இன்றிரவும் அவரைத் தொட முடியும். எனவே நாங்கள் அவரைத் தொட விரும்புகிறோம். 27 பொதுவாக யாராவது சொல்வார்கள், “சரி, உங்களுக்கு இன்ன சகோதரரைத் தெரியும்,” ஏதோ ஒரு ஊழியக்காரர், சுவிசேஷகர், “என்மேல் கைகளை வைத்தார், மேலும், ஓ, கர்த்தர் என்னைக் குணமாக்கினார். அவர்கள் வைக்கிறார்கள்... இன்ன சகோதரர் கைகளை வைத்தார்.” பார்க்கிறீர்களா? அது எல்லோரையும், யாராவது ஒருவர் மேல் கைகளை வைக்க அந்தச் சகோதரரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பச் செய்கிறது. உண்மையில், அதைச் செய்தது ஒரு சகோதரரின் கைகள் அல்ல. அது உங்கள் விசுவாசம், அதுதான் அதைச் செய்கிறது. எனவே, சுவிசேஷகர் ஊரை விட்டுச் சென்றதும், போதகர் சபையின் பார்வையில் வழக்கமாக ஒரு மிகச் சிறிய நபராகவே தெரிவார். சில காரியங்கள் நடக்கின்றன, சுகமளித்தல்கள் மற்றும் பல. யாராவது குணமடைவதற்கு முன்பாக அந்தச் சுவிசேஷகர் மீண்டும் ஊருக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். கவனியுங்கள். நீங்கள் அதை ஒருபோதும் விசுவாசிக்காதீர்கள். 28 தேவன் மீதான உங்கள் விசுவாசமே சுகத்தைக் கொடுக்கிறது. பார்க்கிறீர்களா? நீங்கள் தேவனை விசுவாசிக்க வேண்டும். மேலும் இப்போது உங்களால் அவரைத் தொட முடியுமானால், பின்பு, யாரும் உங்கள் மேல் கைகளை வைக்கவில்லை. உங்கள் விசுவாசமே அவரைத் தொட்டது, மேலும் உங்கள் விசுவாசம் உண்மையை கொண்டுவந்தது. எனவே யாரும் உங்களைத் தொடவில்லை, ஆனால் உங்கள் விசுவாசம் அவரைத் தொட்டது. எனவே அது அப்பொழுது அவருக்கு உண்மையான நிஜமான சாட்சியைக் கொண்டுவருகிறது. அவரை—அவரை மகிமைப்படுத்தவே நாங்கள் இங்கே இருக்கிறோம். 29 இப்போது, ஒவ்வொரு நாளும், என் மகன் கீழே வந்து ஜெப அட்டைகளை கொடுப்பான். அவர் இங்கே இல்லையென்றால், மற்றவர்களில் ஒருவர், சரி, பிரச்சாரக் குழுவினர் அதைக் கொடுப்பார்கள். மேலும் அவர்கள் ஜெப அட்டைகளை வழங்குகிறார்கள், அதில் ஒரு எண் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய அட்டை மட்டுமே. ஒவ்வொரு இரவும், அந்த எண்களை அழைத்து வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கி றோம். மேலும் இப்போது நாங்கள்... ஒவ்வொரு நாளும் புதிய அட்டைகளை வழங்குகிறார்கள், ஏனென்றால் புதியவர்கள் வருகிறார்கள். மேலும் அவர்கள் எல்லாவற் றையும் முதல் நாளிலேயே கொடுத்துவிட்டால், அவர்களுக்கு எந்த ஜெப அட்டையும் கிடைக்க வாய்ப்பில்லை. 30 மேலும் பிறகு, அதில், ஜெப வரிசை எங்கே அழைக்கப்படும் என்று யாருக்கும் சரியாகத் தெரியாது, ஏனென்றால் இந்தக் காரியங்களைக் கையாள்வதில் எங்களுக்குப் போதுமான அனுபவம் உள்ளது. ஒருமுறை, ஒரு நபர் மக்களுக்கு ஜெப அட்டைகளை விற்று, அவர்களை மேடைக்குக் கொண்டு வருவதை நாங்கள் பார்த்தோம், எனவே நிச்சயமாக நாங்கள் அதை நிறுத்த வேண்டியிருந்தது. 31 எனவே நாங்கள் கீழே வருகிறோம், சிறுவன் ஒவ்வொரு நாளும் மாலை ஆறரை மணிக்கு உங்களுக்கு முன்பாக ஜெப அட்டைகளைக் கீழே கொண்டு வருகிறான், மேலும் அவன் உங்கள் முன்பாகவே இந்த ஜெப அட்டைகளைக் கலக்குகிறான். பின்னர் எடுக்கிறான், உங்களுக்குப் பத்து கிடைக்கலாம்; மற்றவருக்கு முப்பத்தைந்து கிடைக்கலாம்; அடுத்தவருக்குத் தொண்ணூறு; அடுத்தவருக்கு அறுபது, அப்படியே. மேலும், மீண்டும், உங்களுக்கு என்ன அட்டை கிடைத்தது என்று அவனுக்குத் தெரியாது. 32 மற்றொரு காரியம் என்னவென்றால், நான் இரவில் கீழே வரும்போது, நாங்கள் எங்கே ஆரம்பிக்கப் போகிறோம் என்று எனக்கே தெரியாது. நாங்கள் ஒரு இடத்தில் ஆரம்பிக்கலாம், மற்றொரு இடத்தில், எங்கு வேண்டுமானாலும், முன்னும் பின்னுமாகச் செல்லலாம். சில சமயங்களில் இந்த வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எண்ணி, இந்த வரிசையால் பெருக்கி, இந்த வரிசையால் வகுப்பேன். 33 முன்பெல்லாம், நான் ஒரு சிறு குழந்தையை எழுந்து நின்று எண்ணச் சொல்வேன். மேலும் அவன் எங்கே நிறுத்துகிறானோ, அங்கே நான் ஆரம்பிப்பேன். நம்புவீர்களோ மாட்டீர்களோ, தாய் அந்தச் சிறுவனைச் சரியாக அவளுடைய எண்ணில் நிறுத்தச் செய்தாள். நாங்கள் இன்னமும்—நாங்கள் இன்னமும் மனிதர்களுடன்தான் பழகிக்கொண்டிருக்கிறோம், பாருங்கள், எனவே நீங்கள்—நீங்கள் அதை வேறு வழியில்தான் செய்ய வேண்டும். 34 எனவே, இது இப்போது பல, பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் கர்த்தருக்குச் சித்தமானால், ஒவ்வொரு இரவும் வியாதியஸ்தர்களுக்காக நாங்கள் ஜெபிப்போம். 35 மேலும் இப்போது நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், இப்போது, இயேசு கிறிஸ்து இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எல்லா மதங்களும் சரியாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்; ஆனால் கிறிஸ்தவத்தைத் தவிர அவற்றில் எதுவும் உண்மையானதோ சரியானதோ அல்ல. 36 நான் ஒரு மிஷனரி. நான் உலகத்தை பலமுறை சுற்றி வந்திருக்கிறேன். மேலும் நான் அனைத்து வகையான வெளிநாட்டுத் தளங்களுக்கும் சென்றிருக்கிறேன், மேலும் உலகம் முழுவதும் உள்ள புறமதஸ்தர்கள், புத்தர், மற்றும்—மற்றும் முகம்மது மற்றும் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மையாகவே ஒரே ஒரு உண்மையான மதம்தான் இருக்கிறது, இரட்சிப்பைக் கொண்டுள்ள ஒரே ஒரு உண்மையானது, அதுவே கிறிஸ்தவம். 37 கிறிஸ்தவம் என்று நாம் அழைக்கும் பலவிதமான வடிவங்கள் நம்மிடம் உள்ளன, ஆனால் ஒரே ஒரு கிறிஸ்தவம்தான் உள்ளது. கிறிஸ்தவம் என்பது ஒரு சபைப் பிரிவு அல்ல. அது ஒரு மக்கள் குழு அல்ல. கிறிஸ்தவம் என்பது ஒரு நபர், அது கிறிஸ்து, மேலும்—மேலும் நீங்கள் அவருடைய—அவருடைய குடிமக்கள். மேலும் இப்போது, அவர் உயிரோடு இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். நாங்கள் அதை முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம். மேலும் அவர் இப்போது இங்கேயே இருக்கிறார் என்று விசுவாசிக்கிறோம், அவர் எப்போதும் போல இன்றிரவும் உயிரோடு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறோம். மேலும் அவர் முன்பி ருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக அவர் நம் மத்தியில் வந்திருக்கிறார். 38 நம்மிடம் சிறந்த பள்ளிகளும் வேதப் பாடசாலைகளும் உள்ளன. நிச்சயமாக, நாம் அதைப் பெறும்போது, யோசனைகளைக் கொண்ட மனிதர்களைப் பெறத் தொடங் குகிறோம், அவர்கள் அதை உள்ளே புகுத்துகிறார்கள். இரண்டு மனிதர்கள் புறப்பட்டு, ஒரு—ஒரு—ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க ஒப்புக்கொண்டால், அது எவ்வளவு நன்றாக இருந்தாலும், ஒரு வருட காலத்திற்குள், அந்த ஸ்தாபனத்தில் எல்லா வகையான காரியங்களும் புகுத்தப்படும், ஏனென்றால் உங்களுக்குப் பல்வேறு யோசனைகள் கிடைக்கின்றன. மேலும் வித்தி-… எனவே, அது பரவாயில்லை, அது ஒரு சகோதரத்துவத்தைக் காக்கிறது, அதற்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால், காரியம் என்னவென்றால், உங்கள் ஸ்தாபனத்தாலோ, உங்கள் சபைப் பிரிவினாலோ நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. 39 இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் சொந்த தனிப்பட்ட விசுவாசத்தினாலேயே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். அவ்வளவுதான். எனவே அது உங்களுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் மட்டுமே உள்ளதாகும். எனவே நீங்கள் வேதவசனத்தை ஆராய்ந்து பார்த்து, முழு இருதயத்தோடு அவரை விசுவாசியுங்கள், மேலும்—மேலும் அவர் உங்களை இரட்சிப்பார், அல்லது உங்களைக் குணமாக்குவார். அவர் தமது வார்த்தையைக் காக்கவில்லையென்றால், பின்பு அவர் தேவன் அல்ல; அவர் தமது வார்த்தையைக் காத்தால், அவர் தேவன் என்பதை அது நிரூபிக்கிறது. பார்க்கிறீர்களா? எனவே, அவர், நாங்கள் அவரை முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம். 40 மேலும் இப்போது நீங்கள் என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள், எங்களால் முடிந்த மிகச் சிறந்ததை நாங்கள் செய்வோம். மேலும் ஒவ்வொரு இரவும் நாங்கள் சீக்கிரமாக முடிக்க முயற்சிப்போம். வழக்கமாக, நாங்கள் ஒன்பதரை மணிக்கு முன்பாகவே ஆராதனைக் கூடத்தையோ அல்லது கட்டிடங்களையோ விட்டு வெளியேறிவிடுவோம். இப்போது, இன்றிரவு ஒருவேளை இன்னும் கொஞ்சம் நேரம் அதிகமாகலாம். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நமக்கு இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் உள்ளன, எனவே இன்றிரவு நாம் குறித்த நேரத்திற்கு வெளியேறலாம். நாம் சிறிது நேரம் பேசுவோம். "41 ஆனால், இன்றிரவு, நாம் எதை அடைய முயற்சிக்கிறோம் என்பதற்கான அடிப்படையை நான் அமைக்க விரும்புகிறேன். தேவன் தம்முடைய சபைக்கு, தம்முடைய மக்களுக்கு அளித்த ஒரு ஈவின் வரிசையில், நாம் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க, இதற்கு சற்று அதிக நேரம் எடுக்கும். மேலும், நிச்சயமாக, அதை நம்மால் நியாயப்படுத்த முடியாது; ஒரு மனிதனால் அதை செய்ய வழியே இல்லை. அதை வெறும் மூன்று அல்லது நான்கு இரவுகளில் எப்படி செய்வது. நீங்கள் பழக்கப்பட்டு, அந்நியராக இருப்பதினால் ஏற்படும் அந்த விசித்திரமான உணர்வுகள் எல்லாம் விலகும் நேரத்தில்தான், மற்ற மக்கள் சுகமடைந்திருப்பதை நீங்கள் காணத் தொடங்குவீர்கள். மேலும் காரியங்கள் நடந்திருக்கும். நீங்கள் வேதத்தை ஆராய்ந்து பார்த்து, ""சரி, அது அப்படித்தான் இருக்க வேண்டும். நான் அதை அப்படிப் பார்த்ததே இல்லை, ஆனால் இதோ அது இருக்கிறது"" என்று சொல்வீர்கள். அது ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை ஓட வேண்டும்." 42 இப்போது, இந்த வேதாகமத்தில் எழுதப்படாத காரியங்களையும் தேவனால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். அவரால் முடியும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர் தேவன். ஆனால் அவர் இங்கே வாக்குத்தத்தம் செய்ததைச் செய்கிற வரைக்கும், அது எனக்குப் போதுமானதாக இருக்கிறது. இந்த புத்தகத்துடன் எதையும் கூட்டவோ அல்லது இதிலிருந்து எதையும் குறைக்கவோ கூடாது என்று நான்-நான்-நான் நம்புகிறேன். இது இயேசு கிறிஸ்துவின் முழுமையான வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன். அது அப்படித்தான் என்று நான் நம்புகிறேன். எப்படியிருந்தாலும், அனைத்து உபதேசங்களும் இந்த வேதாகமத்திலிருந்தே வர வேண்டும். 43 வேதத்தின்படியல்லாத, மற்றும் இந்த வேளைக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்ட வேதத்தின்படியல்லாத காரியங்களை நான் சொல்வதையோ அல்லது செய்வதையோ நீங்கள் பிடித்தால், நீங்கள் செய்ய வேண்டிய காரியம், அதை எனக்காகச் செய்ய நீங்கள் கடமைப் பட்டிருக்கிறீர்கள், மேலாளரைப் பார்த்து, அதற்காக நான் சீர்படுத்தப்படுவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். ஏனென்றால், நானும் ஒரு மனிதன்தான். உங்களில் மற்றவர்களைப் போலவே நானும் பரலோகத்திற்குப் போக விரும்புகிறேன். 44 இப்போது, இன்றிரவு, தேவனுடைய நித்திய வார்த்தையிலிருந்து சிலவற்றை நாம் வாசிக்கப்போகிறோம். முதலில் நாம்... எபிரெயர் புஸ்தகத்தின் 1-ம் அதிகாரத்திலிருந்து சுமார் மூன்று வசனங்களை வாசிக்கப் போகிறோம், அதன்பிறகு எபிரெயர் புஸ்தகத்தின் கடைசி அதிகாரமான 13-ம் அதிகாரத்திலிருந்து சுமார் மூன்று வசனங்களை வாசிக்கப்போகிறோம். 45 இப்போது, நாம் எப்போதுமே தேசபக்தி உறுதிமொழி எடுக்கும்போதோ, கொடிக்கு வணக்கம் செலுத்தும்போதோ, அல்லது தேசிய கீதத்தைப் பாடும்போதோ எழுந்து நிற்போம். தேவனுடைய வார்த்தைக்கு என்ன? நாம் இதை வாசிக்கும்போது எழுந்து நிற்போம். 46 இப்போது இந்த விலையேறப்பெற்ற வார்த்தையை நாம் வாசிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள், எபிரெயர் 1. அதன்பிறகு எபிரெயர் 13, அதில் 5-ம் வசனத்தில் தொடங்கி 8-ம் வசனம் உட்பட வாசிப்போம். பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகை யாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத் துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமான வருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். 47 இப்போது எபிரெயர் 13:5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகு வதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். "48 ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். நாம் நம்முடைய தலை களையும், அதோடு நம்முடைய இருதயங் களையும் தாழ்த்தியிருக்கும் இந்த வேளையில், இந்த கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது தேவனிடத்தில், ""தேவனே, எனக்கு ஒரு பெரிய தேவை இருக்கிறது. என்னை நினைத்தருளும், ஆண்டவரே"" என்று சொல்லும் அளவுக்கு, நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்பக்கூடிய விண்ணப்பங்கள் இங்கே யாருக்காவது இருக்கிறதா? உங்கள் கைகளை உயர்த்துவதன் மூலம் அதை தெரியப் படுத்துவீர்களா? ""என்னை நினைத்தருளும். ஆண்டவரே, ஒரு தேவைக்காக நான் இங்கே இருக்கிறேன்"" என்று சொல்லுங்கள்." "49 எங்கள் பரம பிதாவே, ""நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்பதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்"" என்று அவர் சொன்னதை அறிந்தவர்களாய், கர்த்தராகிய இயேசுவின் அந்த சர்வ வல்லமையுள்ள நாமத்தில் நாங்கள் உம்மை அணுகுகிறோம். மேலும் அவருடைய நாமத்தில் நாங்கள் எதைக் கேட்டாலும், அது—அது தேவனால் கேட்கப் பட்டிருக்கிறது என்ற இந்த நிச்சயம் எங்களுக்கு இருப்பதற்காக, ஆண்டவரே, அதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பிதாவே, இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம், என்னுடைய இரு கைகளையும் உயர்த்தி, என் விண்ணப்பமாக, பரம பிதாவே, இந்த ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் பதிலளிக்கும் படி நான்-நான் உம்மிடம் கேட்கிறேன். அங்கே தங்களுக்குப் பிரியமானவர்கள் இரட்சிக்கப் படாத மக்களும், மற்றும்—மற்றும் வியாதி யுள்ளவர்களும், மற்றும்-மற்றும் ஒருவேளை குடும்பப் பிரச்சனைகள், நிதிப் பிரச்சனைகள் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஓ தேவனே, இந்த-இந்த பழைய உலகம் நிச்சயமாகவே எங்கும் வியாதியாயிருக்கிறது. மேலும், ஆண்டவரே, உம்முடைய வருகைக்காக நாங்கள்-நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம், அங்கே ஒரு பெரிய, ஆயிரம் வருட அரசாட்சி இருக்கும், மேலும் அங்கே-அங்கே நீதிமான்கள் கிறிஸ்துவுடன் அரசாளுவார்கள். அந்த வேளைக்காக நாங்கள் காத்துக் கொண்டி ருக்கிறோம், ஆண்டவரே. பூமியின் மீதான கடைசி சந்ததியை நாம் பார்த்துக்கொண்டிருக்கிற இந்த காலத்திலே, நாங்கள் அப்படி வாழ முயற்சிக்கிறோம், மேலும் அவருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்." 50 பிதாவே, இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, இந்த தேசத்திலே இரட்சிக்கப்படக்கூடிய ஒவ்வொரு ஆத்துமா வையும் நீர் இரட்சிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதை அருளுங்கள், பிதாவே. பின்பு கூட்டம் முடிந்தவுடன், ஒருவேளை நாம் அவர்களைத் தவறவிட்டால், எல்லா சபைகள் முழுவதிலும் ஒரு எழுப்புதல் உண்டாகட்டும். மேலும்-மேலும் விரைந்து வாருங்கள், ஆண்டவரே, வாருங்கள். "51 பல இடங்களில் பூமியைப் பிளக்கும் படியான பூமியதிர்ச்சிகள் மீண்டும் வருவதையும், மனிதர்களின் இருதயம் சோர்ந்துபோவதையும், பயத்தையும், திகைப் பையும், மனவேதனையையும், ஜாதிகளின் கலக்கத்தையும் நாம் காண்கிறோம். மேலும் நாம்-நாம் சரியான முடிவுகாலத்தில் இருக்கிறோம். அந்த நாளில் நடந்த அந்தப் பெரிய பூமியதிர்ச்சியைப் பற்றி நாம் எண்ணுகிறோம், அதைப்போல ஒன்று இருந்ததேயில்லை; ஆயிரத்துத் தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பு, மற்றொரு புனித வெள்ளியன்று, இயேசு உலகத்தால் புறக் கணிக்கப்பட்டபோது, பூமி முழுவதும் அதிர்ந்தது. தேவன், அவர் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார். அந்த நாளில் பூமி அதிர்ந்தது, குன்றுகளும் மலைகளும் இடிந்து விழுந்தன, நகரங்கள் தகர்ந்தன, தண்ணீர் காற்றில் சீறியது, உலகம் முழுவதுமே அதை உணர்ந்தது. ஆண்டவரே, நீர் திரும்ப வரும்போது அது எப்படி இருக்கும்? ""மலைகளையும் கன்மலைகளையும் நோக்கி அவர்கள் கூப்பிடுவார்கள்"" என்பதில் ஆச்சரியமில்லை." 52 பிதாவே, வீடு செல்லும் அந்தப் பெரிய வேளைக்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கச் செய்தருளும். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அருளுங்கள், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். "53 இப்போது, விசேஷமாக, நீங்கள் செவிகொடுக்க வேண்டும், அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாத்தியமான அளவு பயபக்தியுடன் இருங்கள், குறிப்பாக நாம் பேசிக்கொண்டிருக்கும்போது. ஏனென்றால், ஒவ்வொரு இரவும், நாம் என்ன வைக்கப்போகிறோம் என்ற வார்த்தைகளை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்றே தெரியாமல் மேடைக்கு வருவீர்கள். பாருங்கள், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஒரு புரிதலோடு வர வேண்டும், அந்த வழியில்தான் நாம் வரவேண்டும் என்று கிறிஸ்து விரும்புகிறார். மேலும் ஒருவேளை... நீங்கள் செய்வதில் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். உங்களுக்கு விசுவாசம் இல்லை யென்றால், நீங்கள் ஏதோ ஒருவிதமான தாறுமாறான நிலையில், ""நான் அப்படி நம்புகிறேன்"" என்று சென்றால், அது ஒருபோதும் நடக்காது. அது நடக்கவே முடியாது. பாருங்கள்? நீங்கள் அப்படிச் சென்றால் உங்களுக்கு விசுவாசம் இருக்க முடியாது. நீங்கள் எதற்காகச் செல்கிறீர்கள் என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் அது நடக்கப்போகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது-அப்பொழுது, அது நடக்கப் போகிறது என்பதில் நீங்கள்-நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்." "54 இப்போது, நினைவில் கொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள். நம்முடைய கருப்பொருள் மற்றும் நம்முடைய வேதபகுதி என்ன வென்றால், ""இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவரா யிருக்கிறார்.""" 55 இப்போது, இன்றிரவுக்கான என்னுடைய வேதபகுதியின் தலைப்பு: கிறிஸ்து எல்லாத் தலைமுறைகளிலும் மாறாதவராகவே அடை யாளம் காணப்படுகிறார் . "56 இப்போது, வேதாகமம் சொல்கிறது, ""அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்"", மேலும் அவர் எப்படி அப்படி இருக்க முடியும், அவரை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதை அறிய விரும்புகிறோம். அவர் மற்ற எந்தக் காலத்திலும் இருந்ததைப்போலவே இப்போதும் இங்கே இருந்தால், நமக்குள்ளே அவர் எப்படி அடையாளம் காணப்படுகிறார் என்பதை நாம் அறிய விரும்புகிறோம்." 57 அவரைப் பற்றி எத்தனையோ மக்கள் எத்தனையோ வித்தியாசமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், ஒவ்வொ ருவரும் ஒரு தனிநபராக, கிறிஸ்துவைப் பற்றிய நம்முடைய எண்ணத்தை வரைய முயற்சிக்கிறோம், அவர் எப்படிப்பட்டவர், அவர் பார்க்க எப்படி இருப்பார், மற்றும்-மற்றும் உளவியலாளர்கள் எப்படி ஒரு சித்திரத்தை வரைந்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, ஹோஃப்மான் வரைந்த முப்பத்து மூன்று வயதில் கிறிஸ்துவின் சிரசு, மற்றும்-மற்றும் சால்மன் மற்றும் வேறு சிலருடைய சித்திரங்கள், ஆனால், பாருங்கள், அவர் பார்ப்பதற்கு அப்படி இருந்தார் என்று நமக்குத் தெரியாது. ஆகவே அவர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார் என்பதை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது, ஏதோ ஒரு சித்திரத்தை வரைவதன் மூலமாகவும் புரிந்துகொள்ள முடியாது. 58 ஆகையால், யாராவது மேடையின் மீதோ அல்லது நமக்கு மத்தியிலோ வந்து, அவருடைய கைகளில் தழும்புகளும், ஆணி வடுக்களும், அவருடைய நெற்றியில் முட்களின் அடையாளங்களும், இரத்தக் கசிவுடனும் இருந்தால், இப்போது பாருங்கள், அது-அது கிறிஸ்துவாக இருக்காது. ஏனென்றால், அந்தச் சரீரம் மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது, அவர் வரும்போது, ஒவ்வொரு கண்ணும் அவரைக் காணும், ஒவ்வொரு முழங்காலும் முடங்கும். பாருங்கள்? 59 ஆனால் என்ன, அப்படியானால் அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக எப்படி இருக்க முடியும்? பாருங்கள்? அவர் என்ன-என்னவாயிருக்கிறார் என்பதை நாம் இப்போது கற்றுக்கொள்ள வேண்டும். "60 ஒருவேளை இங்குள்ள லூத்தரன் மக்களிடம், அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று நான் கேட்டால்? ""ஏன்,"" அவர்கள் சொல்வார்கள், ""நாங்கள்-நாங்கள் அவரை எங்கள் சபையில் வைத்திருக்கிறோம்."" சரி, நான் அதைச் சந்தேகிக்கவில்லை. ""ஆனால் அவர் இதுதான்."" அதன்பிறகு பாப்டிஸ்ட் மக்களிடம் திரும்பிக் கேட்டால், அவர்களுக்கு-அவர்களுக்கு சற்று வித்தியாசமான எண்ணம் இருக்கும். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட், ஃபோர்ஸ்கொயர், அந்த-அந்த பெந்தெகோஸ்தே யுனைடெட், மற்றும்-மற்றும் அதன்-அதன் வெவ்வேறு பிரிவுகள் போன்ற பலவிதமான முழு சுவிசேஷ மக்களிடம் நான் திரும்புவேன், ஒவ்வொரு வருக்கும் அதைக் குறித்து வித்தியாசமான எண்ணம் இருக்கலாம். அங்குள்ள ஒவ்வொரு தனிநபரும் மாறுபடலாம். ஆனால் அவர்கள்..." 61 நாம் ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடிய ஒன்று நமக்கு இருக்க வேண்டும், இல்லையென்றால் நாம் எங்கே-எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியாது. அதைத் தீர்த்துவைக்கும் காரியம் தேவனுடைய வார்த்தையாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் நம்முடைய விசுவாசப் பிரமாணங்கள் மற்றும் நம்முடைய எண்ணங் களைச் சாராமல், தேவனுடைய வார்த்தை-வார்த்தை அதைத் தீர்த்துவைக்க வேண்டும். "62 ஆகவே, ஆகையால், அவர்-அவர் சிலருக்கு, அவர் வெறுமனே ஒரு-ஒரு பெரிய அமைப்பாளர் என்று அவர்களில் சிலர் உரிமை கொண்டாடுகிறார்கள். ""அவர் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் கொண்ட ஒரு-ஒரு குழுவை அமைத்தார். அவர் ஒரு சிறந்த அமைப்பாளர்."" நமக்குத் தெரிந்தவரை, அவர் ஒருபோதும் எதையும் அமைக்கவில்லை. அவர் ஒருபோதும் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய வில்லை. அவர் வெறுமனே..." "63 அவர் தேவனின் வெளிப்பாடாக இருந்தார். ""தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்."" பிதா என்னவாக இருந்தாரோ, அதை அவர் தம்மில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அவர் சொன் னார், ""பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். பிதா என்னில் வாசமாயிருக்கிறார். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்."" வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ""அவரும் பிதாவும் ஒரே நபராக இருப்பது அவருக்குக் கொள்ளையாடிய பொருளாக எண்ணவில்லை"" என்னுமளவுக்கு, அவர் தம்மில் தேவனை, ஆவியானவரை அவ்வளவாக வெளிப்படுத்தினார்." "64 இப்போது, இங்கே நாம் காண்கிறோம், ""அவர் ஒரு தத்துவஞானி"" என்று சிலர் நினைக்கிறார்கள். அவர் ஒரு தத்துவஞானியாக இருந்தார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்... ஆனால் அவர் ஒரு தத்துவஞானியை விட மேலானவர்." 65 அவர்களில் சிலர் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று நினைத்தார்கள். அவர்-அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், அது உண்மை தான், வேதாகமம் அவர் அப்படியிருந்தார் என்று சொல்லுகிறது, ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர். "66 அவர்களில் சிலர் சொன்னார்கள், ""அவர் ஒரு போதகர். 'இந்த மனுஷன் போதிக்கிறது போல ஒருவனும் ஒருக்காலும் போதித்த தில்லை.'"" அவர் ஒரு போதகராக இருந்தார், ஆனால் அவர் ஒரு போதகரை விட இன்னமும் மேலானவர். பாருங்கள்?" "67 அவர்களில் சிலர், ""அவர் ஒரு நல்ல மனிதர்"" என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதனை விட மேலானவர். அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார், ஆனால் அவர் ஒரு நல்ல மனிதனை விட மேலானவர்." "68 அது முழுவதையும் சுருக்கிச் சொன்னால், அவர் தேவனாக இருந்தார். ஆகவே அவர் அதற்குக் குறைவானவருமல்ல, அல்லது அதிகமானவருமல்ல. நிச்சயமாக அவர் அதற்கு அதிகமானவராகவும் இருக்க முடியாது. ""ஆனால் அவர்-அவர் மாம்சத்திலே வெளிப்பட்ட தேவனாக இருந்தார், உலகத்திலே விசுவாசிக்கப் பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப் பட்டார், பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.""" "69 இப்போது, அவருடைய உண்மையான வெளிப்பாட்டைப் பெற நாம் காண்கிறோம், நாம்... யோவான், யோவான் 1-ம் அதிகாரத்தில், அவர் சொன்னார், ""ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத் திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.""" 70 இப்போது, ஆதியிலே, நித்தியம் உடைக்கப்பட்டு காலமாகக் குறுகியபோதுதான் காலம் தொடங்கியது. இப்போது, சிறிது காலத்திற்குப் பிறகு, காலம் மீண்டும் நித்தியத்திற்கு வருகிறது. நிச்சயமாக, காலமும் நித்தியம்தான், ஆனால் காலம் என்பது ஒரு ஒதுக்கப்பட்ட இடைவெளியாகும். மேலும் அந்த வழியில்தான், அங்குலங்கள், மற்றும் கெஜங்கள், மற்றும் மைல்கள், மற்றும்-மற்றும் எண்கள், மற்றும் பல காரியங்கள் மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால் அது தேவனுக்கு ஒன்றும் இல்லை. அவருக்கு எந்தக் காலமும் இல்லை. அவர்-அவர் எப்போதுமே இருக்கிறார். 71 அவர் நித்தியமானவர், மேலும் நித்திய ஜீவனுக்கு ஒரே ஆதாரம் அவர்தான், அது நம் பிதாவாகிய தேவனுக்குள் இருக்கிறது. அவர் தாமே நித்தியமானவர். இப்போது, ஆகையால், நமக்கு நித்திய ஜீவன் இருந்தால், தேவனின் ஒரு பகுதி நமக்குள்ளே இருக்கிறது. நமக்குள்ளே தேவன் இருக்கிறார், அவர் இல்லை என்றால், வேறு எந்த வழியிலும் உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்க முடியாது. இது உற்பத்தி செய்யப்பட்டதோ, பின்னர் ஏதோ ஒரு விசுவாசப்பிரமாணத்தின் மூலம் உங்களுக்கு வழங்கப்பட்டதோ அல்ல, அல்லது நீங்கள் அதற்குள் வாழ்ந்து, ஒரு சிறந்த ஆணாகவோ அல்லது ஒரு சிறந்த பெண்ணாகவோ வளர்ந்ததுமல்ல. அது தேவன் தாமே உங்களுக்குள் இருக்கிறார். பூமியிலுள்ள உங்கள் தகப்பனின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதைப்போலவே; பரலோகப் பிதாவின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அது உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே உங்களைக் குறித்த அவருடைய சிந்தனைகளின் பண்பாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதைப் பெறவும், உங்களை நீங்களாக மாற்றவும், அவர் அதை உள்ளே புகுத்த வேண்டியிருந்தது, மற்றும் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. அதன்பிறகு நாம் முற்றுப்பெற்றபோது, பின்பு இங்கே இது... 72 அநேக மக்கள் பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடியின் வழியாகப் பார்த்துக்கொண்டு, வாழ்க்கைப் பாதையில் சவாரி செய்கிறார்கள். விசேஷமாக, மனதைப் புண்படுத்துவதற்காக நான் இதைச் சொல்லவில்லை, ஆனால் நம்முடைய அநேகப் பெண்கள், அவர்கள் எப்போதுமே, சுமார் முப்பது வயதைக் கடந்தவுடன், அவர்கள் மீண்டும் பின்னோக்கிச் சென்று—மேலும் மீண்டும் ஒரு இளம் பெண்ணாக இருக்க விரும்புகிறார்கள். ஐம்பது வயதை எட்டினாலும், அவர்கள் இன்னமும் அதே காரியத்தைத்தான் விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல, ஆண்களும் அப்படித்தான். ஆனால் பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடியின் வழியே பார்க்கிற எவராயிருந்தாலும், எங்கேயோ ஒரு இடத்தில் விபத்துக்குள் ளாவார்கள். பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடியின் வழியாகப் பார்த்துக்கொண்டு உங்களால் சாலையில் வாகனம் ஓட்ட முடியாது. "73 ஆனால் பவுல் சொன்னதை நான் நம்புகிறேன், ""பின்னானவைகளை மறந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்."" பாருங்கள்? நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று பார்க்காதீர்கள்; நீங்கள் எப்படி ஆகப்போகிறீர்கள் என்று பாருங்கள்." 74 நான்-நான் ஒருமுறை, ஒரு முதிய தம்பதியினருக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் தங்களின் திருமண வாக்குகளை மீண்டும் எடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு முறையே எண்பத்து மூன்று மற்றும் எண்பத்து நான்கு வயதாகியிருந்தது. அவர்களுக்கு முழுமையான வாக்குகளைக் கொடுத்தேன். நான்-நான் ஒரு இள வயதுக்காரனாக இருந்ததால், முயற்சிக் கையில்... ஒரு பைத்தியக்காரனைப் போல உணர்ந்தேன்... அந்த முதியவர் ஏறக்குறைய அறுபது வருடங்களாகத் திருமணம் செய்திருந்தார், அவரும் அவருடைய மனைவியும், அவர்கள் அந்த வாக்கை எடுத்துக்கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் எப்பொழுதும் போல ஒருவரிலொருவர் அவ்வளவு அன்பாக இருந்தார்கள். "75 அவருக்கு நீண்ட தாடி இருந்தது. நான் அவரிடம் சொன்னேன்... நான் அவளிடம் சொன்னேன், நான் சொன்னேன், ""இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"" சரி, நான் முதலில் அவரிடம் கேட்டேன். நான் சொன்னேன், ""நீங்கள் ஏன் நீண்ட தாடி வைத்திருக்கிறீர்கள், இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?""" "76 அவர் சொன்னார், ""என் வயதிலுள்ள ஒரு முதியவருக்கு நீண்ட தாடி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.""" "நான் அவளிடம், ""இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"" என்று கேட்டேன்." "அவள் சொன்னாள், ""சரி,"" அவள் சொன்னாள், ""ஜான் செய்வது எதுவாயிருந்தாலும் அது மிகவும் நன்றாகத்தான் இருக்கும்.""" "77 எனவே, மற்றும்-மற்றும் நான் சொன்னேன், ""சரி, நீங்கள் அவளைத் திருமணம் செய்ததிலிருந்து உங்களில் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.""" "78 ""உங்களுக்குத் தெரியுமா, கர்த்தர் நல்லவராக இருந்திருக்கிறார்,"" என்றார். ""அவள் எப்பொழுதும் இருந்ததைப் போலவே இப்போதும் அவ்வளவு அழகாக இருக்கிறாள்,"" என்றார். ""உங்களுக்குத் தெரியுமா, அவளுக்கு வயதாக ஆக, என் பார்வையும் மங்கிப்போகிறது,"" என்றார்." 79 எனவே நான்-நான் அது-அது மிகவும் இனிமையானது என்று நினைத்தேன். என் மனைவியும் அதேபோலத்தான் நினைப்பாள் என்று நான் நம்புகிறேன். மேலும் அதைப் பற்றி நாம் அனைவரும் அப்படியே உணருகிறோம் என்று நான் கருதுகிறேன். "80 ஆகவே, ஆனால், அவர்கள்-அவர்கள் வாழ்க்கையைக் கண்டறிந்திருந்தார்கள், அதை எப்படி வாழ்வது என்பதை அவர்கள் கண்டறிந்திருந்தார்கள், பாருங்கள். அது, என்னவென்றால், வயதானவர்களாகிய நாம், ""நாங்கள் அனைவரும் பின்னோக்கிச் செல்ல விரும்புகிறோம், பதினாறு, அல்லது பதி னெட்டு, இருபது வயதுக்கு, அதுபோன்ற ஒரு காரியத்திற்குத் திரும்பச் செல்ல விரும்பு கிறோம்"" என்று சொல்கிறோமே அதுவல்ல." "81  ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாம் வளர்ந்து அந்த வயதிற்கு வாழ்ந்தோம். பின்பு ஏன், அதே உணவை உட்கொண்டும், அவையெல்லாம் அதே இரத்த அணுக்களை உருவாக்கும்போதும், நாம் இப்போது மரிக்கிறோம்? அறிவியலால் இதை நிரூபிக்க முடியாது. இது தேவன் நியமித்த ஒன்று. நீங்கள் அந்த வயதை அடைந்தவுடன், தேவன், ""இப்போது எனக்கு இதுதான் வேண்டும்"" என்றார். அதில் மரணம் நுழைந்துவிட்டது." 82  ஆனால், பாருங்கள், உயிர்த்தெழுதலில், முதிர்வயதை குறித்த எந்த நினைவும் இருக்காது. நாம் நித்தியத்திற்கும், எக்கா லத்திற்கும் அதற்கே திரும்பிச் செல்கிறோம். எனவே, இந்த பரிதாபகரமான வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கு நீங்கள் ஏன் அதைத் திரும்பிப் பார்க்க வேண்டும்? இதோ, அங்கே பாருங்கள், கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டியும், ஒருபோதும் அழிந்துபோகாத, ஒருபோதும் முதிர்வடையாத, ஒருபோதும் வியாதியோ மனவேதனையோ இல்லாத புதிய சரீரமும், அழியாமையும் உங்களுக்கு முன்னே காத்திருக்கிறது. ஆகையால், பாருங்கள், அவருடைய வருகைக்காக அப்படிப்பட்ட காரியங்களை முன்னோக்கிப் பார்த்துக் கொண்டே இருங்கள். "83  இப்போது, ""ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத் திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்."" அவரே இயேசு கிறிஸ்து. அவரே தேவனுடைய வார்த்தையாக இருந்தார்." 84  இப்போது, தேவன் ஒருநாள் உலகத்தை நியாயந்தீர்க்கப்போகிறார். அது நமக்குத் தெரியும். மேலும் அவர் எதை வைத்து உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்பது குறித்து, பல மக்களும் தங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். 85  இப்போது, இங்கு யாராவது நம்முடைய நல்ல கத்தோலிக்க நண்பர்கள் இருந்தால், கத்தோலிக்க சபையை வைத்து தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் அப்படிச் செய்தால், எந்தக் கத்தோலிக்க சபை? பாருங்கள்? ஏனென்றால், கத்தோலிக்க மதத்தில் பல வேறுபட்ட பிரிவுகள் உள்ளன. ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிரீக் ஆர்த்தடாக்ஸ் போன்றவை உள்ளன. பாருங்கள்? சரி, அவர் ரோமன் சபையை வைத்து நியாயந்தீர்த்தால், கிரீக் சபை தவறாகிவிடும். அவர் கிரீக் சபையை வைத்து நியாயந்தீர்த்தால், ரோமன் சபை தவறாகிவிடும். புரிகிறதா? 86  ஆகவே, அவர் லூத்தரன் சபையை வைத்து நியாயந்தீர்த்தால், பாப்டிஸ்ட் சபை தவறாகிவிடும். அவர் பாப்டிஸ்ட் சபையை வைத்து நியாயந்தீர்த்தால், லூத்தரன் சபை தவறாகிவிடும். அவர் பெந்தெகொஸ்தே சபையை வைத்து நியாயந்தீர்த்தால், அவர்கள் இருவரும் தவறாகிவிடுவார்கள். பின்பு, பாருங்கள், பின்பு நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள். "87  அவர் எந்தச் சபையை வைத்தும் உலகத்தை நியாயந்தீர்க்கப் போவதில்லை. அவர் எந்தச் சட்டத்தையோ அல்லது எந்த விசுவாசப் பிரமாணத்தையோ வைத்து வார்த்தையை நியாயந்தீர்க்கப் போவதில்லை. அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறார், அவரே வார்த்தையாயிருக்கிறார். இயேசுவே வார்த்தை. ""ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது."" அந்த வார்த்தை, இன்னமும் தேவனாகவே, ""நேற்றும் இன்றும் என்றென் றைக்கும் மாறாதவராயிருக்கிறார்."" நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவர்!" "88  இப்போது அது எப்படி இருக்க முடியும்? தேவன், ஆதியிலே, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் தகுந்தாற்போல் தமது வார்த்தையைப் பங்கிட்டுக் கொடுத்தார். அதனால்தான் ஆதிமுதலாய் அந்தத்தை அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்தந்த காலத்திற்கான ஒரு தீர்க்கதரிசனம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. வழக்கமாக, சபைகளும், மற்றவைகளும், மற்றும் மக்கள் கூட்டங்களும் எல்லாவற்றையும் மிகவும் குழப்பி வைத்திருந்தார்கள், அவர் ஒரு தீர்க்கதரிசியை அந்த இடத்திற்கு அனுப்பும்வரை இது தொடர்ந்தது. இப்போது, ""பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்க தரிசிகளைக் கொண்டு பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசிநாட்களில் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நமக்குத் திருவுளம்பற்றினார்"" என்று வேதாகமம் சொல்லியிருப்பதை நாம் அறிவோம். ஒரு போதும் இல்லை, மாறாத தேவன் காரியங்களைச் செய்யும் தமது வழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. தேவன் காரியங்களைச் செய்வதற்கு ஒரே வழியைக் கொண்டிருக்கிறார், அவர் அதை ஒருபோதும் மாற்றுவதே இல்லை." 89  ஏதேன் தோட்டத்தில், மனிதன் பாவம் செய்து விழுந்துபோனபோது, அந்த மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு தேவன் ஒரு வழியை ஏற்படுத்தினார், அவர் தமது வழியை ஒருபோதும் மாற்றியதில்லை. குற்றமற்ற ஒருவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் அவர் அந்த மனிதனை ஏற்றுக் கொண்டார், அதன்பிறகு என்ன நடந்தாலும் சரி, அவர் அதை ஒருபோதும் மாற்றவே இல்லை. 90  நிம்ரோடைப் போல, நாம் கோபுரங்களைக் கட்ட முயற்சி செய்தி ருக்கிறோம். மேலும் நாம்... நேபுகாத்நேச்சரைப் போல நாம் நகரங்களைக் கட்ட முயற்சி செய்கிறோம். எல்லா மக்களையும் ஒரே கூட்டமாக மாற்றுவதற்காக, ஸ்தாபனங்களை உருவாக்க நாம் முயற்சி செய்திருக்கிறோம். அதற்குள் அவர்களைக் கொண்டுவர அவர்களுக்குக் கல்வியளிக்க நாம் முயற்சி செய்திருக்கிறோம். அதைச் செய்வதற்கு உலகத்திலுள்ள எல்லாவற்றையும் நாம் முயற்சி செய்திருக்கிறோம். ஆனால் அது ஒவ்வொன்றும், முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. 91  தேவன் ஒரேயொரு அடிப்படையில் மனிதனைச் சந்திக்கிறார், அது சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்தான், அங்கு மட்டுமே அவர் எப்போதுமே அவனைச் சந்திப்பார். அதற்கு வெளியே, நீங்கள் வெறும் காற்றோடுதான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவர் இஸ்ரவேலைச் சந்தித்தார், அவர் யோபைச் சந்தித்தார், அவர் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் சந்தித்தார், எங்கும், சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்தான் சந்தித்தார். இன்றிரவு அவர் நம்மைச் சந்திப்பதற்கும் அதுவே ஒரே வழியாகும்; பெந்தெகொஸ்தேக்களாக அல்ல, மெத்தடிஸ் டுகளாக அல்ல, லூத்தரன்களாக அல்ல, கத்தோலிக்கர்களாக அல்ல. ஆனால் அவர் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் நம்மைச் சந்திப்பார், அது ஒன்றுதான். அந்த ஒரே இடத்தில்தான் அவர் நம்மைச் சந்திப்பார். 92  மாறாத தேவன், எந்தவொரு காரியத்தையும் செய்யும் தமது வழியை அவர் ஒருபோதும் மாற்றுவதில்லை. பாருங்கள்? அவர் தம்மைத்தாமே மாற்றிக் கொள்வதில்லை என்பதை அவருடைய குணாதிசயங்கள் நிரூபிக்கின்றன. "93  அவர் ஒருபோதும் கூட்டங்களோடு இடைபடுவதில்லை, சில பெரிய, ""எங்களுடைய பெரிய ஸ்தாபனம்"" என்று நீங்கள் சொல்கிறீர்கள். தேவன் அதைப் புறக்கணிப்பார். அவர் ஒரு தனிநபரோடு, ஒரு மனிதனோடு இடைபடுகிறார். பாருங்கள்?" 94  ஏனென்றால், நீங்கள், உங்களுக்குள் ளாகவே ஒரு தனிநபர். எந்த இரண்டு மூக்குகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை, எந்த இரண்டு கைரேகைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நீங்கள் ஒரு தனிநபர், தேவன் உங்களோடு ஒரு தனிநபராகவே இடைபடுகிறார். "95  எனவே, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தேவன் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் தமது வார்த்தையைப் பங்கிட்டுக் கொடுக்கும்போது, பின்பு, அந்த வார்த்தை வெளிப்படுத்தப் படுவதற்குத் தயாராகும்போது. இப்போது வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; என் வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அந்த வார்த்தை வெளிப்படுத்தப்படுவதற்குத் தயாராகும்போது, தேவன் ஒரு தீர்க்கதரிசியைக் கீழே அனுப்பி, தமது தீர்க்கதரிசிக்கு அந்த வார்த்தையை வெளிப்படுத்துகிறார். வேதாகமம் சொல்கிறது, ""கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வந்தது. மேலும் அவர் தமது ரகசியத்தை தமது தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்."" ஒரு தீர்க்கதரிசி என்பவர் யார்... கர்த்தருடைய வார்த்தை எங்கே வந்ததோ அவரே, நோவாவின் நாட்களில், மற்றும் எலியாவின் நாட்களில், மற்றும் மோசேயின் நாட்களில் வந்ததுபோல. எரேமியா, மற்றும் ஏசாயா, இன்னும் யாரை நான் சொல்ல முடியும், அவர் அதனிடத்தில் வந்தார். மேலும் அவர்கள் அந்த வார்த்தையை வெளிப் படுத்தினார்கள் அல்லது நிறைவேற்றினார்கள்." 96  இப்போது, கவனியுங்கள், ஆகவே நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்த எண்ணங்களில் நாம் சரியாக இருக்கிறோமா இல்லையா என்பதை நீங்கள் காண்பீர்கள். "97  இப்போது, பாருங்கள், நம்மில் ஒவ்வொருவரும் காரியங்களைக் கொண்டி ருப்போம், நம்மில் ஒவ்வொருவரும் வேதாகமத்தை வித்தியாசமாக வியாக்கியானம் செய்வோம். ""இதை இப்படித்தான் வாசிக்க வேண்டும்"" என்று மெத்தடிஸ்ட் கூறுகிறார். கத்தோலிக்கர், ""இப்படித்தான்"" என்கிறார். லூத்தரன், ""இப்படித்தான்"" என்கிறார். பெந்தெகொஸ்தேக்காரர்கள், ""இப்படித்தான்"" என்கிறார்கள்." "98  ஆனால் வேதாகமம் சொல்கிறது, ""தேவனுடைய வார்த்தை எந்த சுயதோற்றமான வியாக்கியானத்திற்கும் உரியதல்ல.""" "99  தேவன் தமது சொந்த வார்த்தையை தாமே வியாக்கியானம் செய்கிறார். தேவனுக்கு எந்த வியாக்கியானியும் தேவையில்லை. நாம் வியாக்கியானம் செய்ய அவருக்குத் தேவை யில்லை. தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைச் செய்து, அதை வெளிப்படுத்தி, அதை அப்படியே நிறைவேற்றும்போது, அதுவே அதற்கான வியாக்கியானமாகும். ஆதியிலே தேவன், ""வெளிச்சம் உண்டாகக்கடவது"" என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. தேவன், ""வெளிச்சம் உண்டாகும்"" என்று சொன்னபோது, வெளிச்சம் தோன்றியது, அதுவே அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறது. அவர், ""ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி"" என்றார், அவளும் ஆனாள். ""கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன்"" என்று அவர் சொன்னார், அவர் அப்படியே செய்தார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. தேவன் தமது வார்த்தையை உங்களுக்குத் தெளிவாக்கும்போது, அதுவே வியாக்கியானத்தைக் கொடுப்பதாகும்." 100  இப்போது, மோசே வந்தபோது, அவர் நோவாவின் செய்தியை எடுத்துக் கொண்டிருக்க முடியாது; மோசே எடுத்திருக்க முடியாது, அல்லது-அல்லது, நோவா மோசேயின் செய்தியை எடுத்திருக்க முடியாது. யோசுவாவும் அவர்களுடைய எந்த செய்தியையும் எடுத்திருக்க முடியாது, பாருங்கள், ஒவ்வொருவரும். ஏசாயா வேறொருவருடைய செய்-... ஒவ்வொரு செய்தியும் அந்தக் காலக்கட்டத்திற்கானதாகும். 101  மேலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற காலக்கட்டத்தில், அந்த வார்த்தை வியாக்கி யானம் செய்யப்படும்போது, தேவன் அந்த வார்த்தையை வெளியே பேசி, அந்தக் காலக்கட்டத்திற்கான வார்த்தையை உயிரடையச் செய்து, அதற்கான வியாக்கியானத்தைக் கொடுக்கும்போது, அதுவே தேவன் கிறிஸ்துவுக்குள் வெளிப்படுவது ஆகும். பாருங்கள்? ஏனென்றால், கிறிஸ்துவே வார்த்தையாக இருக்கிறார், மேலும் அந்த வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிறிஸ்துவாகவே இருக்கிறார். 102  யோசேப்பிற்குள் இருந்தது தேவனே. யோசேப்பின் குணாதிசயம் அப்படியே கிறிஸ்துவை முன்னடையாளம் காட்டியது. அவர் தம்முடைய தகப்பனாரோடு அங்கிருந்த பெரிய சபையின் காலத்தில் பிறந்தார். அவர் ஆவிக்குரியவராக இருந்ததால் அவருடைய சகோதரர்கள் அவரைப் பகைத்தார்கள். அவர் தரிசனங்களைக் கண்டார் மற்றும் சொப்ப னங்களுக்கு அர்த்தம் சொல்லக் கூடியவராயிருந்தார், அவருடைய சகோதரர்கள் காரணமில்லாமல் அவரைப் பகைத்தார்கள். அவர்கள் இயேசுவைப் பகைத்ததற்கும் அதுவே சரியான காரணமாக இல்லாமலிருந்திருந்தால்! 103  மேலும் கவனியுங்கள், அவர் தம்முடைய தகப்பனால் நேசிக்கப்பட்டார்; இயேசுவும் அப்படியே. ஏறக்குறைய முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டார்; இயேசுவைப் போலவே. ஒரு குழியில் எறியப்பட்டு, மரித்துப்போனார் என்று எண்ணப்பட்டார்; இயேசுவைப் போலவே. வெளியே எடுக்கப் பட்டு ஒரு சிறைச்சாலையில் போடப்பட்டார்; சிலுவைக்குச் சென்ற இயேசுவைப் போலவே. பின்பு பார்வோனின் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, பார்வோனின் வலதுகரமானார்; இயேசுவும் அவ்வாறே, தேவனுடைய வலதுபாரிசத்தில் ஏறினார். யோசேப்பு அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது, எக்காளங்கள் முழங்கின, முழங்கால் யாவும் முடங்க வேண்டியதிருந்தது, யோசேப்பு வந்து கொண்டிருந்தார்; அது போலவே இயேசு சிங்காசனத்தை விட்டுத் திரும்பி வரும்போது, எக்காளம் முழங்கும், முழங்கால் யாவும் முடங்கும். "104  அவர்-அவர் தாவீதுக்குள் இருந்தார். ராஜாவாக இருப்பதிலிருந்து தாவீது தம்முடைய சொந்த ஜனங்களாலேயே புறக்கணிக்கப் பட்டபோது, அவர் மலையின் மீது ஏறிச்சென்று, ஒலிவமலையின் மேலிருந்து திரும்பிப் பார்த்தார்; அவர் தம்முடைய சொந்த ஜனங்களிடமிருந்து வெளியேற்றப்பட்டதால், மலையின் மீது ஏறிச்சென்று, நகரத்தைத் திரும்பிப் பார்த்து, அழுதார். அதிலிருந்து எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தாவீதின் குமாரன் அதே மலையின் மீது அமர்ந்து, தமது சொந்த நகரத்திலேயே புறக்கணிக்கப்பட்டதால், அழுதார். மேலும், ""எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்க்கும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன்னைக் கூட்டிச் சேர்க்க மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனமில்லாமற் போயிற்று"" என்று சொன்னார். பாருங்கள்? அது ஒவ்வொரு தலைமுறையிலும் கிறிஸ்துவாக இருக்கிறார். தாவீதுக்குள் இருந்தது கிறிஸ்துவே." "105  வேதாகமம் சொல்கிறது, ""மோசே எகிப்தின் பொக்கிஷங்களையும், எகிப்தின் இன்பங்களையும் ஐசுவரியங்களையும் விட்டு விட்டு, கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்."" மேலும் வனாந்தரத்தில் அவர் கிறிஸ்துவைப் பின்பற்றினார், அதுவே அக்கினி ஸ்தம்பமாக இருந்தது. அது, சரி, அது தேவனிடமிருந்து வெளிவந்த லோகோஸ் (Logos) ஆக இருந்தது, அது அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவே." 106  இப்போது, அந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும், மக்கள் வழக்கமாக அதை நம்ப விரும்புவதில்லை என்பதை நாம் காண்கிறோம், ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே தங்கள் சொந்த வழியில் நிலை பெற்று விட்டார்கள். நீங்கள் ஒரு மூலையைத் திரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறீர்கள். பின்பு அந்த மூலைக்கு வரும்போது, அனைவரும் இந்த வழியாக ஓடுகிறார்கள், அவர்கள் அந்த மூலையைத் திரும்ப விரும்புவதில்லை. ஆனால் வார்த்தை அந்த வழியாகச் செல்கிறது என்று சொன்னால், கட்டிடம் அந்த வழியாகவே செல்கிறது. பாருங்கள்? அங்குதான் நாம் காலத்தின் அந்தச் சந்திப்புகளைப் பெறுகிறோம். அங்கேதான் அது கடினமாக இருக்கிறது. அங்கேதான் மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருந்தது. 107  இப்போது, நினைவில் கொள்ளுங்கள், தேவன் காரியங்களைச் செய்யும் தமது வழியை ஒருபோதும் மாற்றுவதில்லை; எப்போதும் வேதவாக்கியங்களின் வழியாகவே, அது அப்படியேதான் இருக்கிறது. இப்போது, நோவாவின் நாட்களில், நோவாவுக்குள் இருந்தது கிறிஸ்துவே. அது நோவா... 108  மோசேக்குள் இருந்ததும் கிறிஸ்துவே. பாருங்கள், அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பதற்காகப் பிறந்த ஒரு காலத்தில் பிறந்தார், அவர் ஒரு நாணற்பெட்டியில் வைக்கப்பட்டார்; எல்லா குழந்தைகளையும் கொன்றதினிமித்தம், கிறிஸ்து எப்படி நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டியிருந்ததோ அதுபோலவே. அவர் வனாந்தரத்தில் வெளியே வந்தபோது, நியாயப் பிரமாணத்தைக் கொடுப்பவராகவும், மற்றும்-மற்றும் ஒரு ஆசாரியனாகவும், மற்றும் ஒரு-ஒரு-ஒரு தீர்க்கதரிசியாகவும், மற்றும் பலவாகவும், எல்லாமே கிறிஸ்துவைச் சரியாக முன்னடையாளம் காட்டின, தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தபடியே அது தீர்க்கதரிசிகள் வழியாகத் தொடர்ந்து வந்தது. 109  இப்போது அவர், தேவன், எல்லா காலக்கட்டங்களிலும் தம்மை அடையாளப் படுத்துவதை நாம் காண்கிறோம். எப்படி? இப்போது அவர் தம்மை எப்படி அடையாளப்படுத்தினார்? அவர் எந்தக் குணாதிசயத்தைப் பயன்படுத்தினார்? ஆதி முதலான அவருடைய அதே குணாதிசயமே: தமது வார்த்தையை வெளிப்படுத்தி, தமது வார்த்தையை உயிரடையச் செய்வதே. அதுதான் அந்த அடையாளம், அந்தக் காலக்கட்டத்தின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையே. பாருங்கள்? "110  இப்போது, மோசே வந்தபோது, ""இப்போது நாம் ஒரு பேழையைச் செய்து இதிலிருந்து மிதந்து செல்லப் போகிறோம்"" என்று அவரால் சொல்ல முடியவில்லை. அது நோவாவின் செய்தியாக இருந்தது. அதுதான் பிரச்சனை. இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, அந்த எபிரெயர்கள் வேறொரு வெளிச்சத்தின் மங்கலான ஒளியில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவர் கண்டார். அதுதான் இன்றைக்கும் நடக்கிறது. அதுதான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடக்கிறது. அவர்கள் வேறொரு வெளிச்சத்தின் மங்கலான ஒளியில் வாழ்கிறார்கள்." 111  அதனால்தான் மெத்தடிஸ்டுகளாகிய நீங்கள், அந்த இடத்திற்கு வந்தபோது, லூத்தர்... நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள், ஒரு லூத்தரன் காலக்கட்டத்தின் மங்கலான ஒளியில் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள்; அவர்களால் ஜான் வெஸ்லியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெந்தெகொஸ்தே வந்தபோது, மெத்தடிஸ் டுகளால் பெந்தெகொஸ்தேயை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் மெத்தடிஸ்டின் மங்கலான ஒளியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது பெந்தெகொஸ் தேக்காரர்கள் எத்தகைய மங்கலான ஒளியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்? பாருங்கள்? 112  நீங்கள் செய்ய வேண்டியது என்ன வென்றால், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற வேளையைக் கண்டறிந்து, அந்த நேரத்தில் இங்கே என்ன இருக்க வேண்டும் என்பதை அறிந்து, அதை தேவன் உயிரடையச் செய்து வெளிப்படுத்துகிறாரா என்பதைப் பார்ப்பதே ஆகும், அப்போதுதான் நாம்-நாம் இந்தக் காலக்கட்டத்திற்கான சரியான வியாக்கி யானத்தைப் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம். "இப்போது இயேசு வந்தபோது, அவர்கள், ""எங்களுக்கு மோசே இருக்கிறார்"" என்றார்கள்." "113  அவர் சொன்னார், ""நீங்கள் மோசேயை அறிந்திருந்தீர்களானால், என்னையும் அறிந்திருப் பீர்கள். அவர் என்னைக்குறித்து எழுதியிருக் கிறார்."" அவர் சொன்னார், ""வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே."" வேறு வார்த்தைகளில் சொல்வ தானால், ""வேதவாக்கியங்களில் பாருங்கள்."" பாருங்கள்?" "114  ஓ, அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை அவ்வளவு ஆழமாக வைத்திருந்தார்கள். அவர் சொன்னார், ""ஆம், உங்கள் பாரம்பரியங் களினால், தேவனுடைய வார்த்தையை மக்களுக்கு வீணாக்கிவிட்டீர்கள். வார்த்தை அவர்கள்மீது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களை அவ்வளவாக பாரம்பரியங்களுக்குள் தள்ளி விட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் சொல்கிறீர்கள்...""" "இப்போதும் அதே காரியம்தான் நடக்கிறது. ""நான் இப்படிப்பட்டவன். நான் இதற்குச் சொந்தமானவன்.""" "115  நான் ஒருமுறை ஒரு பெண்ணிடம், ""நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?"" என்று கேட்டேன். அதற்கு அவள், ""நான் ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவேன்"" என்றாள். இப்போது, அதற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல." "116  நான் ஒருமுறை ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்மணிக்காக ஜெபிக்கச் சென்றேன். அவள், ""காத்திருங்கள். அந்தத் திரைகளை இழுத்துவிடுங்கள். அந்தத் திரைகளை இழுத்துவிடுங்கள்"" என்றாள். " "நான், ""என்ன விஷயம்?"" என்று கேட்டேன். " "அவள், ""நாங்கள் மெத்தடிஸ்டுகள்"" என்றாள். " "நான் கேட்டேன், ""நீங்கள் ஒரு கிறிஸ்தவர் இல்லையா?"" " """நான் ஒரு மெத்தடிஸ்ட்"" என்றாள்." "117  நான் சொன்னேன், ""சரி, அவ்வளவுதான். அதுவே அதைத் தீர்மானித்துவிட்டது, அப்படியானால். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல. நீங்கள் வெறும் ஒரு மெத்தடிஸ்ட் மட்டுமே.""" 118  ஆகவே பின்பு, அதுதான்-அதுதான் விஷயம், பாருங்கள், அவர்கள் அதை அறிந்துகொள்வதே இல்லை. மேலும், பாருங்கள், அவர்கள் வேறொரு வெளிச்சத்தின் மங்கலான ஒளியில் வாழ்கிறார்கள். மேலும் அந்த மங்கலான ஒளி என்பது... அது என்ன? அது ஒரு தவறான வெளிச்சம். அது ஒரு பிரதிபலிப்பு. நான்... 119  என்னுடைய வீடு அரிசோனாவிலுள்ள டியூசனில் இருக்கிறது. நான் பாலைவனத்தில் வாழ்கிறேன். அங்கே கானல் நீர் உண்டு. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது சூடான பாலைவனத்தில் சூரியனின் பிரதிபலிப்பாகும், அது ஒரு பொய்யான வெளிச்சத்தைப் பிரதிபலித்து, அது தண்ணீரைப் போலத் தோன்றச் செய்கிறது. நீங்கள் அங்குச் செல்லும்போது, அங்கே எந்தத் தண்ணீரும் இருப்பதில்லை. 120  அதுதான் மங்கலான ஒளி என்பது. அது வாக்குறுதி அளிப்பது போன்ற ஒரு காரியம், ஆனால் நீங்கள் ஒருபோதும் அதைச் சென்றடைய முடியாது. 121  மேலும், இப்போது, உலக வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய கொள்ளை என்பது, இங்கிலாந்தில் சற்றுமுன் நடந்த அந்த ஏழு மில்லியன் டாலர் கொள்ளையாகும். அது தவறான வெளிச்சங்களால் செய்யப்பட்டது. அவர்கள் அங்கே வெளிச்சங்களை வைத்து அந்த இரயிலை மெதுவாக்கினார்கள், ஸ்காட்லாந்து யார்டால் (Scotland Yard) கூட அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உலக வரலாற்றிலேயே அவர்கள் கண்ட மிகப்பெரிய கொள்ளையானது, ஒரு தவறான வெளிச்சத்தால் செய்யப்பட்டது. 122  இயேசு கிறிஸ்துவின் சபைக்கு இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய கொள்ளையானது, ஒரு தவறான வெளிச்சமாகும், தேவன் மக்களுக்கு இந்த மணிநேரத்தின் வெளிச்சத்தை செலுத்த அல்லது காண்பிக்க முயற்சிக்கும்போது, இது வேறு ஏதோவொரு காலத்தின் பிரதி பலிப்பாகும். 123  இயேசு வந்தபோது, அவர் வார்த்தையாக இருந்தார். அப்படியே மோசேயும் வார்த்தையாக இருந்தார்; மோசே, மற்றும் மற்ற தீர்க்கதரிசிகளும் வார்த்தையாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் வார்த்தையின் ஒரு பகுதியாகவே இருந்தார்கள். அவர் முழுமையான வார்த்தையாக இருந்தார். அவர் வார்த்தையின் பரிபூரணமாக இருந்தார். அவர் வார்த்தையாகவே இருந்தார். "124  அப்போது அவர்கள் மோசேயின் காலத்தின் மினுமினுக்கும் பிரதிபலிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் சொன்னார், ""நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், என்னையும் அறிந்திருப்பீர்கள், ஏனென்றால் மோசே என்னைக்குறித்து எழுதியிருக்கிறார்.""" "125  அவர்கள் சொன்னார்கள், ""சரி, உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டேன் என்று சொல்கிறாய், இப்போது நீ பைத்தியம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.""" "அவர் சொன்னார், ""ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.""" "126  அந்த ""நான் இருக்கிறேன்"" எரிகிற முட்செடியில் இருந்தார். அது அக்கினி ஸ்தம்பமாக இருந்தது. காண்கிறீர்களா? அவரே ""நான் இருக்கிறேன்"". வேதாகமம் சொல்கிறது, ""இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்."" அவருடைய குணாதிசயங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. அவருடைய வார்த்தைகள் அப்படியே இருக்கின்றன." 127  அது ஒவ்வொரு காலத்திற்குமான வார்த்தையின் பகுதியாகும். அவர் அதை எப்படி வெளிப்படுத்துகிறார்? தமது ஊழியக்காரர் களாகிய தீர்க்கதரிசிகளின் மூலமாக அவர் அதை வெளிப்படுத்துகிறார். அவர் எல்லாம்... ஒரு தீர்க்கதரிசி எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறார்? அவர் எதையாவது தீர்க்கதரிசனமாகச் சொல்லும்போது, அது நிறைவேறினால் தான். 128  இப்போது, தீர்க்கதரிசிகள் இப்போது, இந்த நாட்களில், நமக்கு தீர்க்கதரிசிகளின் வரங்கள் கிடைத்துள்ளன... அல்லது தீர்க்கதரிசன வரங்கள். நீங்கள் கைகளை வைத்து, ஜெபிக்கும்போது, நீங்கள்... சபையில் உள்ள ஒன்பது ஆவிக்குரிய வரங்களில் வரங்கள் வருகின்றன. அதாவது, தீர்க்கதரிசனத்தை சபை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, அது ஐந்து ஆவிக்குரிய நியாயாதிபதிகளால்... அல்லது மூன்று ஆவிக்குரிய நியாயாதிபதிகளால் நிதானிக்கப்பட வேண்டும். "129  ஆனால், ஒரு தீர்க்கதரிசி அப்படிப் பட்டவர் அல்ல. ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசியாகவே பிறக்கிறார். ""வரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளே."" அது உங்களுக்குள் இருக்கும் ஒன்று. அது உங்களோடு பிறந்த ஒன்று. தேவன் அதை உங்களுக்குள் நியமித்தார்." ஏன், மோசே ஒரு தீர்க்கதரிசியாகவே பிறந்தார். "130  எரேமியா, வேதாகமம் சொல்கிறது, ஏன், சொன்னது... தேவன் எரேமியாவிடம் சொன்னார், ""நீ உன் தாயின் வயிற்றில் உருவாக்கப்படும் முன்னமே, நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்கு ஒரு தீர்க்கதரிசியாக நியமித்தேன்.""" "131  யோவான் ஸ்நானகன், அவன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஏசாயா அவனைக் கண்டார், ""வனாந்தரத்திலே கூப்பிடுகிற வனுடைய சத்தம்."" அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியன். அவன்... பொதுவாக, அவர்கள் திரும்பிச் சென்று தங்கள் தகப்பனின் வேலையை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவனுடைய வேலை மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவன் மேசியாவை அறிவிக்க வேண்டியதிருந்தது. எனவே அவன் வனாந்தரத்திற்குச் சென்றான். கல்வி இல்லை; அவனுக்குக் கல்வி தேவைப்படவில்லை. இந்த மேசியா யார் என்பது குறித்து அவனுக்கு நேரடியான வெளிப்பாடு இருக்க வேண்டியதிருந்தது." "132  அவன் அவரை அறிந்திருந்தான். அவன் சொன்னான், ""நான் சாட்சி கொடுக்கிறேன், தேவனுடைய ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவர்மேல் இறங்குவதையும், 'இவர் என்னுடைய நேச குமாரன்' என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானதையும் நான் கண்டேன். இவரே அவர்.""" "133  அவன் ஏதாவது வேதபள்ளியிலோ அல்லது வேறெதிலாவதோ இருந்திருந்தால், அவர்கள் சொல்லியிருப்பார்கள், ""இப்போது, இதோ இங்கே இருக்கும் சகோதரன் ஜோன்ஸ் உங்களுக்குத் தெரியும், அவர் பார்ப்பதற்கு அப்படியே மேசியாவைப் போலவே இருக்கிறார்,"" பாருங்கள், இணங்க வைக்கப் பட்டிருப்பார்." "134  ஆனால், அவனுடைய வேலை மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவன் வனாந்தரத்திற்குச் சென்று தேவனோடு தனித்திருக்க வேண்டியதிருந்தது. அவன் வெளியே வந்தபோது, அவனுக்கு எந்தக் கல்வியும் இருக்கவில்லை. அவன் மனிதர்களைப் போலப் பேசினான். அவன் சொன்னான், ""ஓ, விரியன்பாம்புக் குட்டிகளே, அல்லது புல்லில் இருக்கும் பாம்புகளே.""" "135  இப்போது அது ஒரு படித்த மனிதனாக இருந்திருந்தால், அவர் வேறு சில வார்த்தை களைச் சொல்லியிருக்கலாம், உங்களுக்குத் தெரியும், ""நீங்கள் ஒரு சிறிய அசௌகரியம்,"" அல்லது அதுபோல வேறு ஏதாவது. ஆனால் அவர் வேறு ஏதோ ஒன்றைக் கொண்டுவந்தார், அவர் வேறு உயர்ந்த, நெறிமுறை சார்ந்த வார்த்தைகளையோ அல்லது அவருடைய கல்வி சார்ந்த வேறு எதையோ கொண்டுவந்திருப்பார்." "136  ஆனால் யோவான் சொன்னான், ""அவர்கள் ஒரு பாம்பைப் போல பதுங்கிச் செல்பவர்களாகவும் வழுவழுப்பானவர்களாகவும் இருந்தார்கள்."" வனாந்தரத்தில் அவன் கண்டது அதைத்தான். அவன் சொன்னான், ""பாம்புக் குட்டிகளே, வரப்போகிற கோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? 'நாங்கள் இதற்குச் சொந்தமானவர்கள், அதற்குச் சொந்தமானவர்கள்' என்று நினைத்துக் கொண்டு, உங்களிடம் ஏதாவது இருப்பதாக எண்ணாதீர்கள்."" இன்றைக்கும் அவர் அதே காரியத்தைச் சொல்ல மாட்டாரா என்று ஆச்சரியப்படுகிறேன்! ""இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண தேவனால் முடியும்."" அவன் பார்த்த அந்தப் பாறைகளை. மேலும், ""கோடரியானது மரங்களின் வேரருகே வைக்கப்பட்டிருக்கிறது."" அவன் வனாந்தரத்தில் பார்த்தவை. ""நல்ல கனிகொடாத மரமெல்லாம், கனி தராத மரங்கள், வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்."" காண்கிறீர்களா? அவனுடைய பிரசங்கங்கள் நிழலாட்டமாக இருந்தன. ஆனால் அவர்—தேவன் அவரை எதற்காக நியமித்தாரோ சரியாக அப்படியே அவர் இருந்தார். காண்கிறீர்களா? அவரே அந்தத் தீர்க்கதரிசி. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. கவனியுங்கள், ஆனால் தேவன் அவரை உருவாக்கி, அவரை ஆக்கினார்." 137  எரேமியா களத்தில் வருவதை நாம் காண்கிறோம், வெவ்வேறு தீர்க்கதரிசிகள் களத்தில் வருவதை நாம் காண்கிறோம், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று நமக்குத் தெரிவதே இல்லை. அவர்கள் எழும்பினார்கள், சென்றுவிட்டார்கள். தேவன் அவர்களைப் பயன்படுத்தினார், அவர்களை முத்திரித்தார், அவர்களை அனுப்பிவிட்டார், அவ்வளவுதான். செய்தி தொடர்ந்து சென்றது. வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டது. அது அடுத்த தலைமுறைக்குச் சென்றது, பின்னர் இந்தத் தீர்க்கதரிசிகள் செய்ததன் மேல் அவர்கள் கட்டினார்கள். மேலும் அவர்கள்... "138  பின்பு அவர் வந்தபோது, இயேசு சொன்னார், ""நீங்கள் சுவர்களையும், தீர்க்கதரி சிகளின் கல்லறைகளையும் வெள்ளையடிக் கிறீர்கள், நீங்களே அவர்களை அங்கே வைத்தவர்கள்."" காண்கிறீர்களா?" 139  ஒரு மனிதன் ஒரு செய்தியோடு எழும்புவான், இந்தச் செய்தியைப் பிரசங்கிப் பான், அந்த மணிநேரத்திற்கான செய்தியைக் கொடுப்பான், கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் கொல்லப்பட்டு, கல்லறையில் வைக்கப்படுகிறான். பல வருடங்கள் கழித்து, அவர்கள் இதன்மேல் ஒரு ஸ்தாபனத்தைக் கட்டுகிறார்கள், அதன்மேல் வேறு ஏதோ ஒன்று வருகிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அந்த மனிதனின் செய்தி கடந்து போய்விட்டது. அது வரலாற்றில் இருக்கிறது. நாம் முன்னோக்கிப் பார்த்து, தொடர்ந்து முன்னேறுகிறோம். "140  விஞ்ஞானம் பின்னோக்கிப் பார்த்து, சில விஞ்ஞானங்கள் சொல்வதைச் சொல் வதில்லை. ஒரு பந்தை உருட்டுவதன் மூலம் ஒரு விஞ்ஞானம் நிரூபித்திருப்பதை நான் படித்தேன்; மற்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில், ""ஒரு மனிதன் மணிக்கு முப்பத்தைந்து மைல் என்ற பயங்கர வேகத்தில் சென்றால், அவன் பூமியை விட்டு மேலே சென்றுவிடுவான்"" என்று சொல்லப்பட்டது. ஆனால் நான் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் இங்கே வந்தேன். காண்கிறீர்களா? எனவே விஞ்ஞானம் அதைப் பின்னோக்கிச் சுட்டிக்காட்டுவதில்லை. அவர்கள் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். இப்போது மனிதன் மணிக்கு நூற்றுக்கணக்கான மைல் வேகத்தில் செல்வதை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர். மேலும் சும்மா... அவர்கள் அதோடு நிற்பதில்லை. அவர்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள்." "141  ஆனால், நாம், நாம் பின்னோக்கிப் பார்த்து, ""பின்னீ என்ன சொன்னார்? சாங்கி என்ன சொன்னார்? மூடி என்ன சொன்னார்?"" என்று பார்க்கிறோம். அவர்கள் சிறந்த மனிதர்கள்; மோசேயும் யோசேப்பும் கூட அப்படித்தான். ஆனால் அது வேறொரு காலம்." 142  இன்றைக்கு இயேசு கிறிஸ்து யாராக இருக்கிறார் என்று வார்த்தை என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். அவர் இன்றைக்கு யாராக இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்வதற்கான ஒரே வழி, அவர் நேற்று யாராக இருந்தார் என்பதைக் கண்டுபிடிப்பதே ஆகும், அப்போது அவர் யாராக இருக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். 143  இப்போது, இன்றிரவு அதைப் பற்றி அதிகமாகப் பேசுவதற்கு நமக்கு நேரமில்லை, ஏனென்றால் நமக்குச் சில நிமிடங்களே மீதமுள்ளன. கவனியுங்கள். ஒவ்வொரு காலத்திற்கும் நியமிக்கப்பட்ட அந்த வார்த்தை, அந்த வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, அதுதான் அந்த நாளின் கிறிஸ்து, ஒவ்வொரு நாட்களிலும் எப்படி இருந்ததோ அதுபோலவே. "144  இப்போது, இயேசு களத்தில் வருவதை நாம் காணும்போது, அவர் நிராகரிக்கப்பட்டார், ஆனாலும், அவரே வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட வார்த்தையாக இருந்தார். இப்போது, உபாகமம் 18:15-ல், மோசே சொன்னார், ""உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக எழும்பப்பண்ணுவார். அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சம்பவிக்கும்."" இப்போது இதோ, அந்தக்காலத்திற்கான சரியான தீர்க்கதரிசியாக அவர் இருந்தார், ஆனால் அந்நாளைய போதகர்கள் அதைக் காணவில்லை. அவர்கள் முடிவில் அவரைக் கொன்று போட்டார்கள். காண்கிறீர்களா? ஆனால் அவர் எல்லாவற்றையும் சரியாகவே செய்தார்." "145  அவர் ஒரு கன்னியினிடத்தில் பிறந்தார். அவர்கள் அதை நம்பவில்லை. ""அது ஒரு முழுமையான பித்துப்பிடித்த செயல்."" ஆனால் அது நிரூபிக்கப்பட்ட பிறகு, இப்போது நாம் அதை நம்புகிறோம்." 146  ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சில் பிரெஞ்சு புரட்சியின்போது அவள் களத்தில் எழும்பியபோது, நீங்கள் கத்தோலிக்க மக்கள் என்ன செய்தீர்கள்? அவள் தரிசனங்களைக் கண்டதாலும், சொப்பனங்களுக்கு அர்த்தம் சொன்னதாலும், ஒரு சூனியக்காரி என்று சொல்லி அவளைக் கொன்றுபோட்டீர்கள். இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் பிராயச்சித்தம் செய்தீர்கள், அவளைக் கொன்று கம்பத்தில் கட்டியெரித்த அந்த ஆசாரியர்களின் உடல்களைத் தோண்டியெடுத்து, ஆற்றில் வீசினீர்கள். அதுதான் உங்கள் பிராயச்சித்தம். காண்கிறீர்களா? 147  புனித பாட்ரிக் பூமியில் இருந்தபோது, அதாவது சூகாட் என்பவரை, நீங்கள் ஒருபோதும் அறியவில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கவே இல்லை. அவரைப் பரிசுத்த வான்களில் ஒருவராகக் கூறுகிறீர்கள்; ஆனால் அயர்லாந்தில் அவருடைய பிள்ளைகள் எத்தனை ஆயிரக்கணக்கானோரை நீங்கள் கொன்றீர்கள் என்று பாருங்கள். காண்கிறீர்களா? 148  எல்லாம் முடிந்தபிறகு, அதன் மெய்ப்பித்தல் முடிந்துபோன பிறகு, அதற்கு ஒரு கல்லறையை எழுப்புகிறார்கள். செய்தி கடந்து போய் வேறொன்றுக்குள் சென்று விடுகிறது. மனிதன் எப்போதுமே தேவன் செய்தவைகளுக்காக அவரைத் துதிக்கிறான், அவர் என்ன செய்வார் என்று முன்னோக்கிப் பார்க்கிறான், ஆனால் அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் புறக்கணிக்கிறான். பிசாசு அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறானோ சரியாக அப்படித்தான் இருக்கிறார்கள், மிகச் சிறந்த மத அறிஞர்களாகவும் கல்வியாளர் களாகவும்: அவர் என்ன செய்தார் என்பதை நிரூபிக்கிறார்கள், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் நிரூபிக்கிறார்கள், ஆனால் அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் புறக்கணிக் கிறார்கள். காண்கிறீர்களா? அது எப்போதும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. நாம் அதைப்பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம். 149  ஆனால் இப்போது ஒருசில நிமிடங்களுக்கு நாம் பின்னோக்கிச் சென்று, இயேசு பூமியில் இருந்தபோது அவர் யாராக இருந்தார் என்பதை அடையாளம் காண்போம். அப்போது அவர் யாராக இருந்தார் என்பதையும், மற்ற காலங்களில் அவர் யாராக இருந்தார் என்பதையும் நாம் கண்டுபிடிப்போம், அது சரியாயிருக்க வேண்டுமென்றால், இந்தக் காலத்திலும் அது அதே காரியமாகவே இருக்க வேண்டும். இப்போது நாம் காண்கிறோம், அவர் களத்தில் வந்தபோது, நமக்கு எந்த... 150  அவர் வார்த்தையாக இருந்தார் என்று நாம் அறிந்திருந்தோம். அவரே வார்த்தையாக இருந்தார். வார்த்தையானது எப்போதுமே பிழையைத் திருத்துகிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? "151  இங்கே ஒரு சிறிய சிந்தனைக்காக, பாருங்கள்... மரியளை வழிபடும் மக்களாகிய நீங்கள். காண்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் தன்மேல் நிழலிட்டதால்தான் இந்த குமாரனைப் பெற்றெடுத்ததாக அவள் சொன்னாள், மேலும், ""இது பரிசுத்த ஆவியினாலே உண்டானது.""" "152  பின்னர் அவருக்கு சுமார் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவர்கள் எருசலேமில், பஸ்கா பண்டிகையில் இருந்தார்கள், அவர்கள்... அல்லது பெந்தெகொஸ்தே. அவர்கள் திரும்பி வரும்போது, அது மூன்று நாள் பயணமாக இருந்தது, அவர்கள் அவரைத் தவற விட்டுவிட்டார்கள். எனவே அவர்கள் அவரைக் கண்டுபிடிக்கத் திரும்பிச் சென்றார்கள், அங்கே அவர் அந்த அரங்கத்தில், சபையில், அந்த ஆசாரியர்கள் போன்றவர்களுடன் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாய், அவளும் யோசேப்பும் அங்கே சென்றார்கள். அவள் சொன்னாள், ""உன் தகப்பனும் நானும் கண்ணீரோடே உன்னைத் தேடினோமே."" காண்கிறீர்களா? அந்த ஆசாரியர்களுக்கு முன்பாக, அவள் யோசேப்பை அவருடைய தகப்பன் என்று அழைத்ததன் மூலம், தன் சொந்த சாட்சியையே மறுதலித்தாள். காண்கிறீர்களா? ""தேவனே"" அவருடைய பிதா என்று அவள் சொல்லியிருந்தாள், ஆனால் இங்கே அவள், ""உன் தகப்பனும் நானும் கண்ணீரோடே தேடினோம்"" என்று சொன்னாள்." "153  அந்த வார்த்தையைக் கவனியுங்கள். அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவன், நிச்சயமாக, தன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் சென்றிருக்க மாட்டார். என்றாலும், அந்த வார்த்தையைக் கவனியுங்கள். அவரே வார்த்தையாக இருந்தார். அவர் சொன்னார், ""நான் என் பிதாவின் காரியங்களில் இருக்கவேண்டியது என்று நீங்கள் அறியீர்களா?"" யோசேப்பு அவருடைய தகப்பனாக இருந்திருந்தால், அவர் அவரோடு அங்கே தச்சுப் பட்டறையில் இருந்திருப்பார். ஆனால் அவருடைய பிதா தேவனாக இருந்தார், அவர் அந்த ஆசாரியர்களைச் சரிசெய்து கொண்டிருந்தார். அதுதான், அங்கே அவர் ""என் பிதாவின் காரியங்களில் இருப்பார்."" வார்த்தை பிழையைத் திருத்துவதைக் பாருங்கள். அது எப்போதுமே, ஒவ்வொரு முறையும் அப்படிச் செய்கிறது. அவள் அதை அநேகமாக ஒருபோதும் காணவில்லை, தொடர்ந்து அப்படியே இருளில் தடவிக்கொண்டே சென்றாள். இன்றைக்கும் மக்கள் அதே காரியத்தைத்தான் செய்கிறார்கள்." 154  ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்கு, அவர் யாராக இருந்தார் என்பதைக் காணும்படி, தேவன் இப்போது நம்மை உயிர்ப்பிப்பாராக. 155  இப்போது நாம் காண்கிறோம், அவருடைய ஞானஸ்நானத்திலிருந்து, வனாந்தரத் திற்குள் சென்று, அவர் வனாந்தரத்திலிருந்து வெளியே வருகிறார். 156  அங்கே அந்திரேயா என்ற பெயருள்ள ஒரு மனிதர், யோவானுடைய கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தார். அவரால் தன் சகோதரன் சீமோனை கூட்டத்திற்குப் போகும்படிச் செய்ய முடியவில்லை. முடிவாக, ஒரு நாள், அவர்கள் தங்கள் வலைகளை அலசிக்கொண்டிருந்தபோது, அவர்—அவர் இயேசுவைச் சந்தித்த அந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீமோன் தன் இருதயத்தில் அறிந்திருந்தான்... "157  சற்று காலத்திற்கு முன்பு, சீமோனைப் பற்றி இங்கே நான் ஒரு சிறிய கதையைப் படித்தேன். அவனுடைய தகப்பன், யோனா, ஒரு பெரிய விசுவாசி, அவர் ஒரு பரிசேயர். அவர் சொன்னார், ""அநேக முறை... மகனே, எனக்கு வயதாகி நரையேறிவிட்டது."" அவர் சொன்னார், ""நான்—நான் மேசியாவைக் காண தேவன் எனக்குக் கிருபை செய்யவேண்டுமென்று அநேக முறை ஜெபித்தேன்."" மேலும் சொன்னார், ""நமது மீன்களுக்காகவும், நமது வாழ்வாதாரத்திற்காகவும் நாம் தேவனை நம்பியிருந்தோம். மேலும்—மேலும் உன் தாயும் இப்போது சென்றுவிட்டாள், என்னால் அவரைக் காண முடியாது போலிருக்கிறது. நான்—நான் மிகவும் வயதாகிவிட்டேன்."" மேலும் சொன்னார், ""இப்போது, மகனே, நீ இங்கே என் பக்கத்தில் உட்கார வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும்." "158  ""இப்போது, அந்த மேசியா எழும்புவதற்குச் சற்று முன்பாக, சகலவிதமான தவறான காரியங்களும் நடக்கும். அது சாத்தானுடையது."" அவர் சொன்னார், ""ஆனால் நினைவில் கொள், நீ மேசியாவை மட்டுமே அறிந்துகொள்வாய், எப்போதுமே வார்த்தை யோடு நிலைத்திரு. மோசே சொன்னார், 'நமது தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்.' இப்போது, நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நமக்கு அப்படி ஒருவர் இல்லை. ஆனால் ஒரு தீர்க்கதரிசி இருப்பார், அடையாளம் காணப்பட்ட ஒரு தீர்க்கதரிசி மக்கள் மத்தியில் எழும்புவார், அவரே மேசியாவாக இருப்பார். அவரே அடுத்தவராக இருப்பார்.""" 159  பின்னர் அந்திரேயா அவனை இயேசுவைக் காண்பதற்காக அழைத்துக் கொண்டு சென்று, யோவானின் பிரசங்கத்தைப் பற்றியும், ஒரு மேசியா வருகிறார் என்று அவர் சொல்வதைப் பற்றியும் அவனிடம் சொன்ன போது, அவனுக்கு அது, சரி, கடந்துசெல்லும் மற்றொரு மனிதரைப் போலவே இருந்தது. "160  எனவே, ஒரு நாள், சீமோன் நேராகக் கர்த்தராகிய இயேசுவின் சமூகத்திற்கே வந்தான். இயேசு அவனைப் பார்த்துச் சொன்னார்—அவனைப் பார்த்துச் சொன்னார், ""உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்."" அது அந்த வேலையைச் செய்தது. காண்கிறீர்களா?" "161  இப்போது, அது தேவனுடைய வார்த்தையின் பண்பு என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக. இப்போது, எபிரெயர் 4-ம் அதிகாரம் 12-ம் வசனம் சொல்லுகிறது, ""தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கான தாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது."" அந்தத் தீர்க்கதரிசிகளும் அப்படித் தான் இருந்தார்கள். அவர்கள், அங்குதான் அவர்கள் காரியங்களை முன்னதாகவே கண்டார்கள், பார்க்கிறீர்களா, அது மிகச் சரியாக இருந்தது, ஏனென்றால் அது அந்தக் காலத்திற்கான வார்த்தையாக இருந்தது. அதை நீங்கள் புரிந்துகொண்டால், அமைதியாக உங்கள் கையை உயர்த்துங்கள். ஆக, பாருங்கள், அது அந்தக் காலத்திற்கான வார்த்தையாக இருந்தது. அதுவே அவர்களைத் தீர்க்கதரிசி என்று அடையாளம் காட்டியது." "162  இப்போது, ஒரு தீர்க்கதரிசி, நமது—நமது ஆங்கில வார்த்தையான prophet (தீர்க்கதரிசி) என்பதன் அர்த்தம் ""ஒரு பிரசங்கி"" என்பதாகும்." 163  ஆனால் பழைய ஏற்பாட்டில், அது சரியாக ஒரு தீர்க்கதரிசி அல்ல, அது ஒரு தரிசனம் பார்ப்பவர் (seer). மேலும் தரிசனம் பார்ப்பவர் சம்பவிக்கப்போகும் காரியங்களை முன்னறிவித்தார். மேலும், எழுதப்பட்ட வார்த்தையின் தெய்வீக வியாக்கியானக்காரர் என்பதற்கான அவருடைய தகுதியும் அதுவே, ஏனென்றால் அவருடைய சொந்த ஊழியமே அந்த வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. பார்க்கிறீர்களா? எனவே அது அவரைத் தீர்க்கதரிசியாக ஆக்கியது. 164  ஆகவே இயேசு வந்தபோது, அவர் சரியாக அதையே செய்தார், அவர் நேராகப் பார்த்து, சொன்னார். அவர் சீமோன் என்ற அவனுடைய பெயரால் அவனை அறிந்திருந்தது மட்டுமல்லாமல், அவனுடைய தகப்பனாகிய யோனாவையும் அவர் அறிந்திருந்தார். அந்த மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று தன் தகப்பன் தன்னிடம் சொன்னது அப்போது அவனுக்குத் தெரிந்திருந்தது. 165  இப்போது, அது சுகமளிப்பதன் மூலமாக அல்ல. அவர்களுக்கு பெதஸ்தா குளம் போன்றவைகளில் சுகமளிக்கும் காரியங்கள் இருந்தன. தேவன் தம்முடைய ஜனங்களுக்காக எப்பொழுதும் சுகமளிப்பதற்கான ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால் இதோ இங்கே அடையாளம் காணப்பட்ட மேசியா இருந்தார். "166  விரைவாக, இயேசு, அல்லது, என்னை மன்னியுங்கள், சீமோன் அதை உணர்ந்து கொண்டான், அவனுடைய அறிக்கையின் பேரில், அவனுடைய பெயர், உங்களுக்குத் தெரியும், ""பேதுரு"" என்று அழைக்கப்படும் என்று இயேசு அவனிடம் சொன்னார்." "167  பின்னர், பிலிப்பு என்ற பெயருடைய மற்றொரு இளைஞன் அங்கு நின்று கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான்; அவர்கள் ஒன்றாக வேத வாக்கியங்களை படித்து வந்தார்கள். நீங்கள் எப்போதாவது பாலஸ் தீனாவிற்குச் சென்றிருந்தால், அவர்கள் எங்கு பிரசங்கித்தார்கள் என்று பாருங்கள். அவன் மலையைச் சுற்றி சுமார் பதினைந்து மைல்கள் சென்றான். அவன் நாத்தான்வேலை ஒரு—ஒரு மரத்தின் அடியில் கண்டான், ஏனென்றால் நாத்தான்வேலுக்கு ஒரு—ஒரு—ஒரு ஒலிவத் தோட்டம் இருந்தது. எனவே, அங்கு வெளியே சென்று, அவன் ஒரு மரத்தின் அடியில் ஜெபித்துக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவன், ""நாங்கள் யாரைக் கண்டோம் வந்து பார், யோசேப்பின் குமாரனும் நாசரேத் தூரானுமாகிய இயேசுவைத்தான்"" என்றான். ""வா. வந்து பார். நாங்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டோம்"" என்றான்." "168  பின்னர், உங்களுக்குத் தெரியும், நிச்சயமாக, இந்த நபர், ஒரு—ஒரு நல்ல மனிதனாக இருந்தபடியால், அவர் சொன்னார், ""இப்போது நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?""" "169  ஒரு மனிதன் இன்னொருவனுக்குக் கொடுக்கக்கூடிய சிறந்த பதிலை அவன் அவனுக்குக் கொடுத்தான். ""வந்து பார்."" ""வீட்டிலேயே தங்கி விமர்சிக்க வேண்டாம். வா, பைபிளைக் கொண்டு வா, நாம் அதை ஆராய்ந்து பார்ப்போம்.""" "170  இப்போது, சந்தேகமில்லாமல், மலையடிவாரத்தில் அவர்கள் பேசிக்கொண்டே சென்றார்கள், ""இப்போது, உனக்குத் தெரியும், மேசியா வரும்போது, அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று நாம் அறிவோம்"" என்றான். " """ஓ, ஆம், மோசே அதை நமக்குச் சொல்லியிருக்கிறார். நாம் ஒரு தீர்க்கதரிசி யைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.""" "171  மேலும், நிச்சயமாக, மக்கள் இப்படி நினைத்தார்கள், ""மேசியா வந்தால், தேவன் தாழ்வாரங்களை இறக்கி, அவர் நேராக தேவாலய வளாகத்தில் இறங்கி வந்து, 'காய்பாவே, நான் வந்துவிட்டேன்' என்று சொல்வார்."" ஆனால் தேவன் காரியங்களை அப்படிச் செய்வதில்லை." 172  அவர் அதை மிகவும் எளிமை யாக்குகிறார். அவர் தம்முடைய சபையை மட்டுமே பெறுகிறார். அவர் அதைத்தான் தேடுகிறார், அவருடைய சபையை. "173  ஆகவே நாம் காண்கிறோம், அவன் சொன்னான், ""ஒருமுறை நீ கொஞ்சம் மீன் விற்றாயே, அல்லது உனக்குக் கொஞ்சம் மீன் விற்றாரே, அந்த ரசீதில் கையெழுத்து போடக் கூட போதிய படிப்பறிவு இல்லாத அந்த முதிய மீனவர் உனக்குத் தெரியுமா?"" " """ஆம். சீமோன்.""" "174  ""அவன் பெயர் சீமோன் என்று அவர் அவனிடம் சொன்னார், மேலும் அவனுடைய தகப்பன் யார்—யார் என்பதையும் அவனுக்குச் சொன்னார். சரி, நீ வரும்போது நீ யார் என்பதை அவர் உனக்குச் சொன்னால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்."" " """சரி, நாம் போய்ப் பார்ப்போம்.""" "175  அவன் இயேசுவின் முன்பாக வந்தான், அது எங்கிருந்தாலும், ஒருவேளை ஜெப வரிசையிலோ, அல்லது எதுவாக இருந்தாலும், அவன் வந்தான். இயேசு, வியாதியஸ் தர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் அவனைப் பார்த்தார். அவர், ""இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்"" என்றார்." "176  ஆஹா, அது அவனுடைய கர்வத்தை அடக்கியது. அவன் சொன்னான், ""ரபீ,"" என்பதற்கு போதகர் என்று அர்த்தம், ""நீர் என்னை எப்போது கண்டீர்? என்னை உமக்கு எப்படித் தெரியும்?""" "177  அவர், ""பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்"" என்றார்." "178  அது அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவன், ""ரபீ, நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் ராஜா"" என்றான். பார்க்கிறீர்களா? அந்த மனிதன் நிஜமாகவே பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். மேசியாவுக்கு அதுதான்—அடையாளமாக இருக்கும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது, ஏனென்றால் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். பார்க்கிறீர்களா? ஏனென்றால், அவர் வார்த்தையாக இருக்க வேண்டும். மேலும் நானூறு ஆண்டுகளாக அவர்களுக்கு ஒருவரும் இல்லை, எனவே இதோ ஒரு மனிதர் தன்னைத் துல்லியமாக அடையாளம் காட்டிக் கொண்டார். அதுதான் நேற்றைய தினத்தில் இயேசுவாக இருந்தார்." 179  இப்போது, நாம் இன்னும் பல கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்க்க முடியும், ஆனால் தற்போதைக்கு அவற்றைத் தவிர்த்து விடுவோம். 180  பூமியில் மூன்று வகுப்பார் இருந்தார்கள், அது நோவாவின் மூன்று மகன்கள்: காம், சேம், மற்றும் யாப்பேத்; அது யூதர்கள், சமாரியர்கள், மற்றும் புறஜாதியார் ஆவார்கள். இப்போது, புறஜாதியாராகிய நாம், ஆங்கிலோ-சாக்சன்கள், நாம் எந்த மேசியா வையும் தேடவில்லை. நாம் நமது முதுகில் ஒரு தடியுடன், சிலைகளை வணங்கிக் கொண்டு, ரோமர்களாகவும், மேலும் நாம் எப்படி யெல்லாம் இருந்தோமோ அப்படியெல்லாம் இருந்தோம். ஆனால் சமாரியர்கள் ஒரு மேசியாவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். 181  மேலும் தம்மைத் தேடுகிறவர் களிடத்திற்கு மட்டுமே அவர் வருகிறார். தேவன் எப்பொழுதும் அப்படித்தான் செய்கிறார். அவர் தம்முடையவர்களிடத்தில் வருகிறார். இப்போது, கவனியுங்கள். 182  அவர் எரிகோவிற்குப் போய்க் கொண்டிருந்தார், ஆனால் சமாரியாவின் வழியே அவர் திரும்பிப் போக வேண்டியதற்கு அவரிடத்தில் காரணம் இருந்தது, அவர் சீகார் என்னப்பட்ட ஒரு ஊருக்கு வந்தார். அவர் சீஷர்களை உணவு வாங்கிவர அனுப்பியிருந்த வேளையில், அவர் அங்கு அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஸ்திரீ, பார்ப்பதற்கு ஒருவேளை அழகிய சிறிய தோற்றமுடையவளாக, அவள் சுமார் பதினொரு மணியளவில் கிணற்றண்டைக்கு வந்தாள். ஏனென்றால், காலையில் வந்த மற்ற கன்னிகைகளுடன் அவளால் வர முடியவில்லை, எனவே அவள் வெளியே வந்தாள். அவள்—அவள் ஒரு கெட்ட பெயரெடுத்தவள். அது என்னவென்று நமக்குத் தெரியும். எனவே, அவள், அநேகமாக அவளது முடி முகத்தில் தொங்கிக்கொண்டிருக்கலாம். அவள் தண்ணீர் குடத்தை கீழே வைக்க வெளியே வந்தாள். அது கைப்பிடிகளுடன் கூடிய ஒரு வகையான குடம் போன்றது. அதை கீழே இறக்குவதற்கு கயிற்றை அதன் மேல் போட்டாள். "183  ""எனக்குக் குடிக்கத்தா"" என்று யாரோ சொல்வதை அவள் கேட்டாள். அவள் திரும்பிப் பார்த்தாள். சுவருக்குச் சாய்ந்து அங்கே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுடைய மனிதரை அவள் பார்த்தாள், இங்குள்ளதைப் போன்ற ஒரு பரந்த காட்சியமைப்பில். மேலும் அவர் அங்கே திராட்சைக் கொடிகளுக்குச் சாய்ந்து அமர்ந்திருந்தார். ஊர்க் கிணறு இன்றும் அப்படியே இருக்கிறது. ""எனக்குக் குடிக்கத்தா"" என்று அவர் கூறினார்." "184  அவர் ஒரு யூதர். ஆக, அங்கேயும் அவர்களுக்குப் பிரிவினை இருந்தது, அதனால் அவள் சொன்னாள், ""இது இல்லை... எங்களால் முடியாது. தேவையில்லை. நீர் அப்படிச் செய்யக் கூடாது. நீர் ஒரு—நீர் ஒரு—நீர் ஒரு யூதன், நானோ சமாரிய ஸ்திரீ. எங்களுக்குள்—எங்களுக்குள் ஒருவருக்கொருவர் எந்த சம்பந்தமும் இல்லை.""" "185  அவர் சொன்னார், ""ஆனால், நீ யாரிடம் பேசுகிறாய் என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீ என்னிடத்தில் குடிக்கக் கேட்டிருப்பாய். நீ இங்கே மொண்டுகொள்ள வராதபடிக்கு நான் உனக்குத் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்."" பாருங்கள், அவர் என்ன செய்ய முயன்றார்? இப்போது, அவளுடைய ஆவியைத் தொடர்புகொள்ள. பார்க்கிறீர்களா?" "186  எனவே, அவள் சொன்னாள், ""ஏன், நாங்கள் இந்த மலையிலே தொழுது கொள்ளுகிறோம். நீரோ, 'எருசலேமில்' என்கிறீர்.""" "187  அவர்கள் தொடர்ந்து கொஞ்சம் பேசினார்கள். இறுதியாக, அவளுடைய பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்தார். அவளுக்குப் பல புருஷர்கள் இருந்தார்கள். அவர், ""போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா"" என்றார். " "அவள், ""எனக்குப் புருஷன் இல்லை"" என்றாள்." "188  அவர் சொன்னார், ""அது சரிதான். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்போது உன்னுடன் இருப்பவனும் உன் புருஷன் அல்ல. நீ சொன்னது..."" " ஆகவே அவளுக்கும் அந்த ஆசாரியர் களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். "189  அந்த ஆசாரியர்கள் அது செய்யப் படுவதைப் பார்த்தபோது, அவர்கள் தங்கள் சபைக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அது நடந்தேறியிருந்தது. பார்க்கிறீர்களா? அவர்கள்—அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தது, எனவே அவர்கள், ""இவன் பெயல்செபூல், ஒரு குறிசொல்லுகிறவன், ஒரு வகையான பிசாசு"" என்றார்கள். ""இவன் பெயல்செபூலின் வல்லமையினாலே இதைச் செய்கிறான்"" என்று சொன்னார்கள். அதைத்தான் ஆசாரியர்கள் சொன்னார்கள்." "190  இந்தச் சிறிய ஸ்திரீ என்ன சொன்னாள்? ""ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது, அதுதான் அவருடைய அடையாளமாக இருக்கும் என்று நாங்கள் அறிவோம். அதைத்தான் அவர் செய்வார். அவர் தீர்க்கதரிசியாக இருப்பார்.""" "191  இயேசு, ""உன்னுடனே பேசுகிற நானே அவர்"" என்றார். ஆஹா! அது அவளுக்குப் போதுமானதாக இருந்தது. பார்க்கிறீர்களா?" 192  நேற்று இயேசு கிறிஸ்து அவர்தான். இன்றும் இயேசு கிறிஸ்து அவராகவே இருப்பார், என்றென்றைக்கும் அவராகவே இருப்பார். அது சரியா? அவர் அப்படித்தான் இருக்கிறார். அவர் மாம்சமான வார்த்தையாக இருக்கிறார், மேலும் அந்த நாளின் வார்த்தை கீழே வந்து தன்னைத் தானே அடையாளம் காட்டிக் கொள்கிறது. "193  மேலும், இப்போது, அவர் அதை மீண்டும் செய்யப்போவதாகவும், தீர்க்கதரிசி திரும்புவார் என்றும் அவர் கூறினார். அவர் தமது தீர்க்கதரிசிகளைத் தாண்டிச் செல்ல முடியாது, ஏனென்றால் அது வார்த்தையாகும். இப்போது, அவர் நமது பரிசுத்தமாக்கலுக்காக மரித்தார், பரிசுத்த ஆவியானவரை நம் மீது திரும்ப அனுப்பினார், இப்போது கவனியுங்கள், அந்த வேலையைச் செய்வதற்கு. இப்போது, தீர்க்கதரிசி சொன்னார், ""பகலுமல்லாத இரவுமல்லாத ஒரு நாள் வரும், ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.""" 194  இப்போது சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. புவியியல் ரீதியாக, அது அப்படித்தான் பயணிக்கிறது. நாகரிகம் சூரியனுடன் சேர்ந்து பயணித்துள்ளது, சுவிசேஷமும் அப்படித்தான். நினைவில் கொள்ளுங்கள், சுவிசேஷம் மீண்டும் ஐரோப்பாவில் தொடங்கியது; கடல்களைக் கடந்து, ஜெர்மனிக்குள்—ஜெர்மனிக்குள் சென்றது; ஜெர்மனியிலிருந்து, இங்கிலாந்திற்கு; இங்கிலாந்திலிருந்து, கால்வாய் வழியாக கிழக்கு கடற்கரையில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றது, மேலும் அது மேற்கிற்கும் சென்று முடிந்தது. இப்போது, அது இன்னும் மேலே சென்றால், அது மீண்டும் கிழக்கிற்குத் திரும்பி வந்துவிடும். நாம் முடிவில் இருக்கிறோம். "195  இப்போது ஒரு நாள் இருந்தது, ஆதியிலே அந்த குமாரன் (Son) உதித்தபோது, தேவனுடைய கு-மா-ர-ன் பூமியில் வந்தார். இப்போது, அவர் மீண்டும் சாயங்கால வேளையில் வாக்களிக்கப்பட்டிருக்கிறார். இப்போது, நாம் ஒரு மந்தமான நாளைக் கொண்டிருந்தோம். நாம் பெரிய கூட்டங்களை நடத்தினோம். வியாதியஸ்தர்களைக் குணமாக் கினோம். நாம் சிறந்த நேரங்களைக் கொண்டிருந்தோம். மேலும் நாம் ஸ்தாபனங் களையும், பள்ளிகளையும், மருத்துவமனை களையும், வேத பாடசாலைகளையும் உருவாக்கினோம், அதெல்லாம் சரிதான், அது வெறும் ஒரு மந்தமான நாள். ஆனால் அவர் வாக்களித்தார், ""இரவு வருவதற்கு சற்று முன்பாக, வெளிச்சமுண்டாகும்.""" "196  இப்போது, இயேசு, பரிசுத்த லூக்கா 17-ம் அதிகாரத்தில் சொன்னார், அவர் சொன்னார், ""சோதோமின் நாட்களில் நடந்ததுபோல."" இப்போது உன்னிப்பாகக் கவனியுங்கள். நான் முடிக்கப் போகிறேன். ""சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாளிலும் அப்படியே நடக்கும்."" இப்போது, அது நம் அனைவருக்கும் தெரியும். நாம் வாசிக்கும் அதே பைபிளைத்தான், ஆதியாகமத்தில், அவரும் வாசித்தார்." 197  சோதோமில் உள்ள சூழ்நிலையைக் கவனியுங்கள். இப்போது, சோதோமில், மூன்று வகுப்பார் இருந்தார்கள். எப்பொழுதும் மூன்று வகுப்பார் இருக்கிறார்கள்: அவர்கள் விசுவாசிகள், விசுவாசிப்பவர்களைப் போல் நடிப்பவர்கள், மற்றும் அவிசுவாசிகள். "198  இப்போது, இங்கே ஆபிரகாம் இருந்தார், அவருடைய பெயர் ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம் என்று மாற்றப்பட்டது, அதற்கு, ""ஜாதிகளுக்குத் தகப்பன்"" என்று அர்த்தம். அவருடைய பெயர் ஆபிராமாக இருக்கும்வரை அவருக்கு ஒரு குழந்தையைப் பெற முடியவில்லை. அது ஆபிரகாம் என்று மாற்றப்பட வேண்டியிருந்தது, ஏனென்றால் காம் (ham) என்றால் ""ஜாதிகளுக்குத் தகப்பன்"" என்று அர்த்தம், இப்போது கவனியுங்கள், ""ஜாதிகளுக்குத் தகப்பன்""." 199  இப்போது கவனியுங்கள், உலகம் முழுவதும், இப்போது இருப்பதைப் போன்று ஒரு காட்சி இதற்கு முன்பு எப்பொழுதும் அமைக்கப்பட்டதில்லை. இப்போது நாம் எல்லாவற்றையும் சரியாக சோதோமின் வரிசையிலேயே காண்கிறோம். நீங்கள் அதை நம்பாவிட்டால், உங்கள் கண்களிலிருந்து உங்கள் திரைகளை விலக்கிவிட்டு, வெளியே நடந்து சென்று ஒவ்வொரு நாளும் தெருவில் பாருங்கள். நீங்கள் எங்கு விரும்புகிறீர்களோ அங்கே, செய்தித்தாள்களைப் பாருங்கள். அது மிகச் சரியாக, ஒரு சோதோம். பார்க்கிறீர்களா? கீழே சோதோமில் லோத்து இருந்தான். 200  ஆனால் இங்கே ஆபிரகாம் இருந்தார், அவர் தெரிந்துகொள்ளப்பட்டவராக, வாக்குத் தத்தம் பெற்றவராக இருந்தார், அவர்—அவர் சோதோமில் இல்லை. அவர் அங்கே கீழே செல்லவில்லை. அவர் வெளியே அழைக்கப் பட்டிருந்தார். 201 இப்போது, மூன்று குழுக்களைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஒரு உண்மையான விசுவாசி இருந்தார்; மற்றும் ஒரு வெதுவெதுப்பானவர் இருந்தார், சோதோமில் இருந்த பெயரளவிலான சபைக்கு லோத்து அடையாளமாக இருந்தார் என்று எந்தவொரு போதகரும் உங்களுக்குச் சொல்வார்; மற்றும் அங்கே சோதோமியர் இருந்தனர். இப்போது கவனியுங்கள். அதற்கு சற்று முன்பு... அவர்கள் இருந்தார்கள்... 202 ஆபிரகாமும் லோத்தும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, ஒரு அற்புதமான குமாரனுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அது சரியா? இன்று சபை அதற்காகத்தான் காத்துக் கொண்டி ருக்கிறதா? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகிய இந்தக் குமாரனின் வருகைக்காக, அவர் வருவதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். "203 இப்போது நிலைமையைப் பாருங்கள். அவள் ஒரு சோதோம் நிலையில் இருக்கிறாள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். நான் கடந்த நாள் இங்கே கலிபோர்னியாவைக் கடந்து சென்றபோது, ஒரு பத்திரிகையையோ அல்லது தாளையோ கையில் எடுத்து வாசித்தேன், ""கடந்த ஆண்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அறுபது சதவீதம் அதிகரித்துள்ளனர்"" என்று அதில் இருந்தது. பார்த்தீர்களா? ஓ, என் தேவனே! இது பரிதாபகரமானது. பார்த்தீர்களா? பெண்கள் தங்களைத் தாங்களே தூக்கி எறிந்ததே இதற்கு காரணம். அது சரிதான். மற்றும் தெருவில், நிர்வாணமாக. மேலும் இது வெறுமனே—இது வெறுமனே ஒரு அவமானம். ஆனால் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று வேதாகமம் சொல்கிறது. மேலும் ஆண்களுக்குக் கூட, அது வெறுமனே அவர்கள்—அவர்கள்—அவர்கள் மாறிவிட்டார்கள். பார்த்தீர்களா? மேலும் இது இன்னும் மோசமாகப் போகிறது. இன்னொரு—இன்னொரு, உலகம் நிலைத்திருக்குமானால், இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில், முழு உலகமும் முற்றிலும் பைத்தியமாகிவிடும். நாற்பது, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய புத்திசுவாதீனத்திலிருந்து, இந்த நேரம் வரைக்கும் உள்ளதைப் பாருங்கள். பார்த்தீர்களா?" 204 இப்போது பின்னணியைப் பாருங்கள். இதோ ஆபிரகாம், தெரிந்துகொள்ளப்பட்டவர், இப்போது இங்கே வெளியே அழைக்கப் பட்டிருக்கிறார். மேலும் அங்கே கீழே சோதோமில் லோத்து இருக்கிறார். மற்றும் மூன்று தூதர்கள் வந்தார்கள். இரண்டு தூதர்கள் கீழே சென்று, லோத்திடம் பேசி, அவர்கள் வார்த்தையைப் பிரசங்கித்து, லோத்தை அங்கிருந்து வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர். அது சரியா? ஆனால் ஆபிரகாமுடன் தங்கியிருந்த இந்த ஒருவர், ஆபிரகாமை எதிலிருந்தும் வெளியே கொண்டுவர முயற்சிக்க வில்லை, ஏனென்றால் அவர் ஏற்கனவே வெளியே வந்துவிட்டார். பார்த்தீர்களா? அவர் வெளியே இருந்தார். "205 ஆனால் அவர் என்ன வகையான அடையாளத்தைச் செய்தார் என்று கவனியுங்கள். இப்போது பாருங்கள். அவர் கூடாரத்திற்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார், சாராள் அவருக்குப் பின்னால் கூடாரத்தில் இருந்தாள். அவர் இன்னும் அவளைப் பார்த்ததில்லை. மேலும் நினைவில் கொள்ளுங்கள், அதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருடைய பெயர் ஆபிராம்; மற்றும், அவளுடைய பெயர் சாராய். இப்போது அவள் சாராள், S-a-r-a-h. அவர் A-b-r-a-h-a-m. அவர், ""ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?"" S-a-r-a-h என்று கேட்டார். " """அவள் உமக்குப் பின்னால், கூடாரத்தில் இருக்கிறாள்"" என்றான்." "206 அவர், ""உற்பத்தி காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்பிவருவேன்"" என்றார். இப்போது, அவர் அந்தக் குழந்தைக்காக இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்தார். அவளுக்கு இப்போது கிட்டத்தட்ட நூறு வயது. அவருக்கு நூறு வயது. அவளுக்குத் தொண்ணூறு. அவர் சொன்னார்-சொன்னார், ""உற்பத்தி காலத் திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்பிவருவேன், உனக்கு அந்தக் குமாரன் பிறப்பான்.""" "207 மேலும் சாராள், உங்களுக்குத் தெரியும், தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள். அவள், ""நானோ கிழவி?"" என்றாள். பார்த்தீர்களா? ஒருவேளை... நாம் கலவையான பார்வை யாளர்களாக இருக்கிறோம், ஆனால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். கணவன் மனைவியாக, குடும்ப உறவு முடிந்து பல வருடங்கள், வருடங்கள், வருடங்கள் கடந்துவிட்டன, பார்த்தீர்களா, ஏனென்றால் அவருக்கு நூறு வயது, அவளுக்குத் தொண்ணூறு வயது, முதிர்வயதானவர்கள். ""நானோ கிழவி, என் ஆண்டவனும் முதிர்ந்தவராயிருக்க, எனக்கு இன்பம் உண்டாகுமோ?"" என்றாள். பார்த்தீர்களா?" "208 அப்போது கூடாரத்திற்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருந்த இந்த மனிதர், ""ஏன் ஆபிரகாம்..."" அல்லது, ""இந்த காரியங்கள் நடக்காது என்று சொல்லி சாராள் ஏன் கூடாரத்தில் சிரித்தாள்?"" என்று கேட்டார்." "209 ஆபிரகாம் அவரை, ""எலோஹிம்"" என்று அழைத்தார். அதுதான் தேவன். எலோஹிம் என்பது—என்பது ""சுயமாய் இருக்கிறவர்,"" பார்த்தீர்களா, சர்வ வல்லமையுள்ள , சுயமாய் இருக்கிறவர். ""ஆதியிலே தேவன்..."" தேவன் என்ற அந்த வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கே திரும்பிப் பாருங்கள், அதே, அதே காரியம்தான் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது, ""எலோஹிம்."" சுய... அங்கே எலோஹிம் மாம்சத்தில் வெளிப்பட்டார், அவர் கன்றின் மாம்சத்தைச் சாப்பிட்டு, பசுவின் பாலைக் குடித்து, அப்பத்தைச் சாப்பிட்டார். மேலும் ஆபிரகாமுடன் பேசிக்கொண்டிருந்தார். மேலும் அங்கே பின்னால் சாராளின் சிந்தனைகளில் என்ன இருக்கிறது என்பதை அவரால் பகுத்தறிய முடியும் என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தார், அதுதான் அவர் எலோஹிம் என்பதை அவர் அறிந்திருந்ததற்குக் காரணம்." "210 இயேசு சொன்னார், கவனியுங்கள், ""மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களில், கடைசி நாட்களில் வெளிப்படும்போது, அது சோதோமின் நாட்களில் நடந்தது போலவே இருக்கும்."" தேவன் தம்முடைய சபையில், மனிதர்களில் வெளிப்பட்டு, தம்மைக் வெளிப்படுத்துகிறார், பார்த்தீர்களா, அப்போது அவர் இருந்ததைப் போலவே மனித மாம்சத்தில். இப்போது பாருங்கள்." 211 நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். எல்லா காலங்களிலும், சபை முதன்முதலில் தொடங்கியதிலிருந்து, இது வரையிலும் h-a-m என்று பெயர் முடியும் ஒரு தூதன் அவர்களுக்கு இருந்ததில்லை, இப்போது G-r-a-h-a-m வரை. சரிதான். அங்கே கீழே, அவர்களை வெளியே அழைத்து, ஓரல் ராபர்ட்ஸ் (Oral Roberts), மற்றும் ஒரு பில்லி கிரஹாம் (Billy Graham), பார்த்தீர்களா, h-a-m. அங்கே மூடி (Moody), சாங்கி (Sankey), ஃபின்னி (Finney), வெஸ்லி (Wesley), பில்லி சண்டே (Billy Sunday), அவர்கள் அனைவரும் இருந்திருக்கிறார்கள், பார்த்தீர்களா, அதுபோன்ற சர்வதேச சபை, உலக சபை!...?... இது வரைக்கும் h-a-m என்று முடியும் ஒருவரும் இருந்ததில்லை, அதுதான் பில்லி கிரஹாம். பார்த்தீர்களா? அது ஆறு எழுத்துக்கள், G-r-a-h-a-m, ஆறு, அதாவது... மனிதன் ஆறாம் நாளில் பிறந்தான், சிருஷ்டிக்கப்பட்டான். ஆறு என்பது மனிதனின் எண். இதோ அவர், மாம்சப்பிரகாரமான சபைக்கு இருக்கிறார். "212 ஆபிரகாம் A-b-r-a-h-a-m, ஏழு எழுத்துக்கள். பார்த்தீர்களா? இன்றைய பின்னணியைப் பாருங்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். ஆபிரகாம் பல அடையாளங்களையும் அற்புதங்களையும், தேவன் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்தார். சபையும் அப்படியே பார்த்திருக்கிறது. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்கள், அந்நிய பாஷைகளில் பேசினீர்கள், இந்த அடையாளங் களையும் அற்புதங்களையும் செய்துள்ளீர்கள். ஆனால் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப் பட்டுள்ளது, ""அப்போது எப்படி இருந்ததோ, அப்படியே மீண்டும் இருக்கும்."" ""சாயங் காலத்திலே வெளிச்சமுண்டாகும்."" இயேசு கிறிஸ்து, அதே; அதே குமாரன் மீண்டும் அரங்கத்தில் தோன்றுவார், அவருடைய சபையில், அப்போது அவர் செய்த அதே காரியத்தைச் செய்வார், அவரே மாம்சமான வார்த்தை என்பதைக் காண்பிப்பார். பார்த்தீர்களா? இருதயத்திலுள்ள ரகசியத்தை அறிந்து, வெளிப்படுத்தி, அவர் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வார். அதுதான் துல்லியமாக தேவனுடைய வார்த்தை." 213 நமக்கு நேரமாகிவிட்டது. எனவே நாம் நமது தலைகளைத் தாழ்த்துவோம், ஒரு நிமிடம், நாம் அவரை நோக்கிப் பார்த்து, அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி அவரிடம் கேட்போம். 214 பரம பிதாவே, நேரம் அனுமதிக்காது; ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை, இதுதான் அந்த வேளை என்று சொல்லிக்கொண்டே, மணிக்கணக்காக நம்மால் அமர்ந்திருக்க முடியும். ஓ ஆண்டவரே, இந்த கடற்கரையில் உள்ள இந்த நல்ல மக்களுடனான எங்கள் முதல் சந்திப்பு இது, இது என்றாவது ஒரு நாள் கடலுக்கு அடியில் சென்றுவிடும், ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு ஆகும் என்று நாங்கள் அறிவோம். அங்கே இருக்கும்... ஓ, முன்னால் எப்பேர்ப்பட்ட ஒரு காலம் காத்திருக்கிறது! 215 ஆண்டவரே, நாங்கள் சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், வல்லமையான பரிசுத்த ஆவியானவர் இப்போது வருவாராக. நான் சொன்ன இந்த வார்த்தைகளை, அவர் உறுதிப்படுத்துவதன் மூலம் அவற்றை ஆதரிப்பாராக. அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறார் என்பதை இந்த பார்வை யாளர்களுக்கு அவர் நிரூபித்துக் கொண்டி ருக்கிறார். அந்த... மேலும் அந்த வேத வசனத்தை நிறைவேற்றுங்கள். நீர் தேவன் என்பதை நிரூபிக்க... நீர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்பதை நாங்கள் அறிவோம் ஆண்டவரே. ஆனால் புனித மத்தேயுவின் புத்தகத்தில், சுமார் 12-ம் அதிகாரத்தில் நாம் வாசிப்பது போல, அவர் தேவன் என்பதைக் காட்ட அவர் குணமாக்க வேண்டியதில்லை. ஆனால் அது நிறைவேறும்படியாக அவர் அதைச் செய்தார். அவர் தம்முடைய வார்த்தையைக் காக்க வேண்டும், அதைச் செய்வதை அவர் விரும்புகிறார். அவர் அதைச் செய்வார், ஏனென்றால் அவர் தேவன். இன்று இரவு, இப்போது, இந்த வேளைக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இந்த வார்த்தையையும் அவர் காத்துக்கொள்வார் என்று நான் ஜெபிக்கிறேன். என் சகோதரர்கள் அனைவரும், நானே, மற்றும் இங்குள்ள மக்கள் அனைவரும், மற்றும் நமது சகோதரிகள், இந்த அன்பான மக்கள், இப்போது நம்மிடையே உமது பிரசன்னத்தைக் காண்பார்களாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 216 இப்போது, நமக்குச் சற்று நேரமாகி விட்டது, எனவே நாம் ஒரு... ஆம், நமக்கு உண்மையிலேயே மிகவும் தாமதமாகிவிட்டது. நாம் இன்னும் சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் எடுக்கப் போகிறோம். ஜெப வரிசையில் சிலரை அழைப்போம். 217 ஜெப அட்டைகள், அவர்களுக்கு A கொடுத்தீர்களா? ஆம், A-க்கள். A, எண் ஒன்று, நாம் ஒன்றைக் கொண்டுவருவோம்... ஜெப அட்டை A, எண் ஒன்று யாரிடம் இருக்கிறது? உங்கள் கையை உயர்த்துங்கள். உங்களால் நடக்க முடியுமானால்... அது ஒரு சிறிய அட்டை, அதில் ஒரு எண் இருக்கும். A, எண் ஒன்று, உங்கள் கையை உயர்த்துங்கள். அது பார்வையாளர்களிடம் இல்லை என்று சொல்கிறீர்களா? "218 அப்படியானால், நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஜெப அட்டை A, ஒன்று? [யாரோ ஒருவர், ""இங்கேதான் இருக்கிறது, சகோதரர் பிரன்ஹாம்."" என்கிறார்] நல்லது, ஓ, இருக்கிறதா? சரி. A, இரண்டு?" 219 அம்மா, உங்களுக்கு விருப்பமிருந்தால், நேராக இங்கே வாருங்கள். நேராக இங்கே வாருங்கள். சரி, பார்ப்போம், அவளால் அதன் வழியாக வர முடியுமா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஓ, ஆமாம், அங்கெல்லாம் பள்ளமாக இருக்கிறது. சரி. 220 A, எண் இரண்டு, அது யாரிடம் இருக்கிறது? மூன்று? உங்கள் கையை உயர்த்துங்கள். உங்களால் இப்போது வர முடியாவிட்டால்... அதனால்தான் நாம் அவர்களை ஒவ்வொருவராக அழைக்கிறோம், நாம் அவர்களை இங்கே நெருக்கமாக நிறுத்த வேண்டியிருக்கலாம். மூன்று? நான்கு, நான்கு யாரிடம் இருக்கிறது? ஐந்து? இங்கே கீழே. அம்மா, மேலே வாருங்கள். 221 ஆறு, ஜெப அட்டை எண் ஆறு. சிறிய, வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்துகொண்டு இங்கே கையை உயர்த்தும் இந்தப் பெண்தானா அது? உங்களிடம் ஆறு இருக்கிறதா? ஏழு? சில நேரங்களில் அவர்கள் காது கேளாதவர்களாக இருப்பார்கள், கேட்க முடியாது. சில நேரங்களில் அவர்களால் நடக்க முடியாது. ஏழு. எட்டு. எட்டு கையை உயர்த்துவதை நான் பார்க்கவில்லை. உங்கள் கையை உயர்த்து வீர்களா? சரி. ஒன்பது. பத்து. சரி. 222 நாம் அங்கே ஒரு நிமிடம் காத்திருப்போம், ஏனென்றால் இப்போது நமக்கு தாமதமாகிவிட்டது. ஒரு நிமிடம் இவற்றைப் பார்ப்போம். உங்கள் அட்டைகளை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களை, ஒவ்வொருவராக அழைப்போம், பார்த்தீர்களா, ஆனால் வரிசையிலேயே இருங்கள். "223 இப்போது, இங்கே எத்தனை பேரிடம் ஜெப அட்டை இல்லை? உங்கள் கையை உயர்த்தி, ""நான் வியாதியாக இருக்கிறேன். என்னிடம் ஜெப அட்டை இல்லை"" என்று சொல்லுங்கள். நான் பார்க்கும்படியாக, உங்கள் கையை நன்றாக உயரே தூக்குங்கள். இது எல்லா இடங்களிலும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இப்போது, பாருங்கள். அவர்கள் வரிசையாக நிற்கும் இந்த நேரத்தில் நான் உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன்." "224 வேதாகமத்தில் ஒரு பெண் இருந்தாள் என்று நாம் சொல்கிறோம், அவளிடமும் ஒரு ஜெப அட்டை இல்லை. மற்றும், ஆனால் அவளுக்கு விசுவாசம் இருந்தது. ஆகையால் அவள்—அவள், ""நான் அவருடைய வஸ்திரத்தை யாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்"" என்றாள். இந்தக் கதை எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக. அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது, அவர் திரும்பிப் பார்த்து, ""என்னைத் தொட்டது யார்?"" என்று கேட்டார்." "225 நல்லது, இது ஒரு மனநோயாளி சொல்வதைப் போல இருக்கிறது என்று பேதுரு நினைத்தார். அவர், ""ஏன், எல்லாரும் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே. யார் என்னை 'தொட்டது' என்று கேட்கிறீரே? ஏன், நீர் இப்படிச் செய்தால், அவர்கள் உம்மைப் பற்றி அவ்வளவு நல்லதாக நினைக்க மாட்டார்கள்..."" என்றார்." "226 அதற்கு அவர், ""ஆனால் நான் பெலவீனமடைந்ததை அறிகிறேன்"" என்றார். வல்லமை அவரிடமிருந்து புறப்பட்டது. அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கும் வரை அவர் திரும்பித் தமது பார்வையாளர்களைப் பார்த்தார். அவளுடைய இரத்தப்போக்கை, அவளுடைய விசுவாசம் அவளைக் குணமாக்கியது என்று அவர் அவளிடம் சொன்னார். இது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்?" "227 இப்போது, ""அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறார்"" என்று நான் சொல்லி முடித்தேனா? ""அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக இருக்கிறார்"" என்று வேதாகமம் சொல்கிறதா? அது சரியா? அப்படியானால் இன்று அவர் எப்படிச் செயல்படுவார்? அவர் நேற்றுச் செயல்பட்டதைப் போலவே செயல்படுவார். அது சரியா? இப்போது, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இன்னும் அவரைத் தொட முடியும். பார்த்தீர்களா? வேதவசனங்கள் பொய்சொல்ல முடியாது. பார்த்தீர்களா?" 228 இப்போது, இங்கே இல்லாத ஒரே ஒரு காரியம் அவருடைய காணக்கூடிய சரீரம்தான். ஆனால் நீங்கள்... அவர் திராட்சச்செடி, நீங்கள் கொடியாக இருக்கிறீர்கள். பார்த்தீர்களா? அதுதான்... நீங்கள்தான் கொடி. நீங்கள்தான் செயல்படுகிறீர்கள். 229 நீங்களும் நானும் ஒன்றாகச் செயல்படுகிறோம். இப்போது, அவர் என்னை எவ்வளவுதான் அபிஷேகம் செய்தாலும், அவர் உங்களையும் அபிஷேகம் செய்ய வேண்டும். பார்த்தீர்களா? ஏனென்றால், வெளிச்சத்தை உருவாக்க—அது எதிர்மறையாகவும் நேர்மறை யாகவும் இருக்க வேண்டும். எனவே, இப்போது, நீங்கள்—நீங்களும் அதை விசுவாசிக்க வேண்டும். "230 இப்போது, ஜெப அட்டை இல்லாத நீங்கள், இந்த வழியை நோக்கிப் பார்த்து, ""கர்த்தராகிய இயேசுவே, அந்த மனிதருக்கு என்னைத் தெரியாது. ஒரு காரியம் நிச்சயம், அவருக்கு என்னைத் தெரியாது. ஆனால் நான் ஏதோவொன்றால் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கிறேன், மற்றும்-மற்றும் அங்கே இயேசு செய்ததைப்போல, அவர் திரும்பிப் பார்த்து அதைப்பற்றி என்னிடம் சொல்லட்டும். அவருக்கு என்னைத் தெரியாது என்று எனக்குத் தெரியும், அதனால் அது நீங்களாகத்தான் இருக்க வேண்டும், அப்படியானால் நான்—நான்—நான் அதை விசுவாசிப்பேன்"" என்று சொல்லுங்கள். உங்களால் அதைச் செய்ய முடியுமா? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? சரி. சரி. நீங்கள் இப்போது ஜெபம் செய்யுங்கள்." 231 நான் இதை எடுத்துக்கொள்கிறேன். இந்த மைக் (phone) அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது... பரவாயில்லை. இது முன்பை விடச் சற்று அதிகமாக உயிருடன் இருப்பது போல இருந்தது. 232 இப்போது, சகோதரர்களே, நீங்கள் பிரசங்கிக்கும் சுவிசேஷம் இதுதான். பார்த்தீர்களா? நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். 233 இப்போது, இப்போது எல்லாரும் உங்களால் முடிந்த அளவு பயபக்தியுடன் இருந்து, இந்த வழியைப் பாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். விசுவாசியுங்கள், ஒவ்வொரு... வெறுமனே-உங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு. நீங்கள் விசுவாசியுங்கள். சந்தேகப்பட வேண்டாம். கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம். "234 இப்போது, இப்போது இங்கே ஒரு அம்மா நிற்கிறார். நாம்... அவரும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அவரைத் தெரியாது. மற்றும்... [அந்தச் சகோதரி, ""அதற்கு முன்பு ஒருமுறை."" என்கிறார்] நீங்கள் என்னை ஒருமுறை பார்த்தீர்களா? [""முன்பு ஒருமுறை, கிளியர்வாட்டரில்.""] எங்கே? [""கிளியர்வாட்டர் என்று நான் நம்புகிறேன்.""] கிளியர்வாட்டரா? அது எவ்வளவு காலத்திற்கு முன்பு? [""அல்லது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஏதாவது ஒன்று.""] ஆம். செயின்ட் பீட்டர்ஸ்பர்க். ஆம். நான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்திருக்கிறேன். [""ஆம்.""] அது பல வருடங்களுக்கு முன்பு. [""ஆம்.""] நல்லது, இப்போது, அநேகமாக பார்வை யாளர்களில் அமர்ந்திருந்திருக்கலாம், அல்லது அதுபோல இருக்கலாம். [""ஆம்.""] அது ஒரு... எனக்கு உங்களைத் தெரிந்திருக்காது, உங்களுக்குத் தெரியும், அல்லது உங்களைப் பற்றி எதுவும் தெரிந்திருக்காது." 235 எனவே இப்போது, இங்கே உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது, அந்த நேரத்தில், கிணற்றருகே, நம்முடைய ஆண்டவரும், அந்தப் பெண்ணும் சந்தித்ததைப் போலவே இருக்கும், பார்த்தீர்களா. அவளுடைய பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய, அவர் அவளிடம் ஒரு நிமிடம் பேசினார். அவர் அதைக் கண்டறிந்தார், ஏனென்றால், பார்த்தீர்களா, அவள்—அவள் ஒரு மனிதப் பிறவி, அவளுக்கு ஒரு ஜீவன், ஒரு ஆவி இருந்தது. அவர் தேவனாக இருந்தார், தேவனுடைய ஆவியானவர் அவரில் இருந்தார். அந்தப் பெண்ணிடம் ஏதோ பிரச்சனை இருந்தது, அது என்னவென்று பிதா அவருக்குக் காண்பித்தார். "236 உங்களுக்குத் தெரியும், அவர் சொன்னார், பிதா முதலில் தமக்குக் காண்பிக்காமல் அவர் எதையும் செய்யவில்லை. உங்களுக்குத் தெரியும், அது புனித யோவான் 5:19. அது சரியா, சகோதரரே? அவர் சொன்னார், ""நான்..."" இல்லை-அவர் பார்த்ததை இல்லை... அவர் முதலில் அதைப் பார்க்க வேண்டும். இயேசு முதலில் ஒரு தரிசனத்தைப் பார்க்கும் வரை ஒரு காரியத்தையும் செய்ததில்லை. இது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? புனித யோவான் 5:19. ""பிதா செய்வதை... பிதா செய்வதை நான் காணாமல் நான் ஒன்றும் செய்வதில்லை."" பார்த்தீர்களா? இப்போது, அவர்..." 237 இப்போது, நிச்சயமாக, நான் அவர் இல்லை, நீங்கள் அவள் இல்லை. ஆனால் அது இன்னும் அதே தேவன்தான். பார்த்தீர்களா? நாம் ஒரு நோக்கத்திற்காக இங்கே சந்தித்துக்கொண்டிருக்கிறோம். 238 இப்போது, இங்குள்ள இந்தப் பெண், நீங்கள் புரிந்துகொண்டபடி, எங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது. பல வருடங் களுக்கு முன்பு, நான் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்தபோது, இன்று இரவு நீங்கள் இருப்பதைப் போல, அவள் ஒரு கூட்டத்தில் பார்வையாளர்களில் அமர்ந்திருந்ததாகச் சொன் னாள். எனக்கு எந்த வழியும் இல்லை... அவள் எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவள், அவளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதை பரம பிதா அறிவார். ஆனால் இப்போது அவள் ஏதோ ஒரு காரணத்திற்காக இங்கே வந்திருக்கிறாள். அவள் வேறொருவருக்காக வந்திருக்கலாம், பணப் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை. அவளே வியாதியாக இருக்கலாம். நான்-நான்... வேறொருவருக்காகவும் நிற்கலாம். அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. பார்த்தீர்களா? அவள் வெறுமனே ஒரு பெண்தான். "239 இப்போது ஒருவேளை அவள் வியாதியாக இருந்து, நான் நமது மேன்மையான சகோதரர், சகோதரர் ஓரல் ராபர்ட்ஸைப் போல இருந்து, அவள் மீது கைகளை வைத்து, ""கர்த்தர் உங்களைக் குணமாக்கி சொஸ்தமாக்குவாராக"" என்று சொல்லி, நீங்கள் அதை விசுவாசிக்கச் சென்றால் எப்படி இருக்கும். அது சரிதான். அது வெறுமனே... அது வேதவசனம்தான். நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் குணமடை வீர்கள். பார்த்தீர்களா? ஆனால், பார்த்தீர்களா, அது சகோதரர் ராபர்ட்ஸின் ஊழியம்; அது என்னுடையதல்ல. பார்த்தீர்களா? " இப்போது இது வேறொரு கோணத்தில், இந்த முடிவுகாலத்தில் இங்கே மேலே உள்ள ஒன்றாக இருக்கிறது. "240 இப்போது இயேசு எப்படிப்பட்டவர்? நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவர். இப்போது அவர் எனக்குக் கொடுத்த, நான் அணிந்திருக்கும் இந்த கோட்டை (suit) அணிந்துகொண்டு அவர் இங்கே நின்றால், இப்போது, அந்தப் பெண் வியாதியாக இருந்தால், அவரால் அவளைக் குணமாக்க முடியுமா? இப்போது கவனமாக இருங்கள். கவனமாக இருங்கள். இல்லை. அவரால் அதைச் செய்ய முடியாது. அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ""அவர் நம்முடைய மீறுதல் களினிமித்தம் காயப்பட்டு; அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்."" அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார். அவர் அவளுக்குத் தம்மைக் வெளிப்படுத்திக் காட்டுவது மட்டும்தான் அவரால் செய்யக்கூடிய ஒரே காரியம், அது சரியா, அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார், உயிரோடி ருக்கிறார் என்பதைத் தெரியப் படுத்துவதுதான். இப்போது, அதை, அவர் தம்மைக் வெளிப்படுத்திக் காட்டுவார். மேலும் அவரால் அதைச் செய்யக்கூடிய ஒரே வழி, அப்போது அவர் இருந்ததைப் போல இருப்பதுதான். அவர் தீர்க்கதரிசியாக இருப்பார். அது சரியா? " 241 இப்போது, நான், அது நானாக இருக்க முடியாது, ஏனென்றால் எனக்கு—எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது, அது என்னை விலக்கிவிடுகிறது. ஆனால் அது அவராகத்தான் இருக்க வேண்டும். ஆகவே நாம் கிளைகளாகவும் அவர் திராட்சச்செடியாகவும் இருந்தால், உங்களைப் பற்றி ஏதோவொன்றை, அல்லது உங்களுக்கு என்ன வேண்டும், நீங்கள் எப்படி இருந்தீர்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், அல்லது நீங்கள் எப்படி இருப்பீர்கள், அல்லது வேறெதாவதை எனக்குத் தெரியப்படுத்த அவர் தம்முடைய ஆவியை எனக்குள் அனுப்புகிறார். அது ஏற்கனவே நடந்திருந்தால், அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஆகவே, அவர் இன்றும் உயிரோடிருக்கிறார், நம்மோடு இருக்கிறார் என்பதை அது உங்களுக்கு நிஜமாகவே காண்பிக்க வேண்டும். புரிகிறதா? "242 அவர் அப்படிச் செய்தால், அது உங்களை விசுவாசிக்கச் செய்யுமா? இப்போது உங்கள் கைகளை உயர்த்துங்கள், நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன், ஆகையால் நீங்கள் தேவனுக்கு வாக்குக் கொடுங்கள், ""அது என்னை விசுவாசிக்கச் செய்யும்."" புரிகிறதா? அவர், அவர்... புரிகிறதா?" 243 இப்போது, அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்பதைப் பற்றி நான் பேசிக் கொண்டி ருக்கிறேன். இப்போது, அவர், அவர் உயிரோடிருக்கிறாரா? அதுதான் விஷயம். அவர் இங்கே இருக்கிறாரா? நாம் சத்தமிட்டோம், ஏதோவொன்றை உணர்ந்தோம். "244 பார்வையில்லாத ஒரு மனுஷன் வெளியே நடந்துசென்று சூரியனை உணர்ந்தால், அது என்னவென்று அவனுக்குத் தெரியா தல்லவா, அதுபோலத்தான். அது ஏதோ சூடாக இருந்தது. ஆனால் அவனால் பார்க்க முடிந்தால், அது என்னவென்று அவன் பார்ப்பான், அது சூரியன் என்று அவன் சொல்வான். ""சூரியன் என்றால் என்ன?"" இதைப் பார்த்திராத வேறொரு மனுஷனுக்கு, ஒருவேளை, இதற்கு முன் யாருக்கும் பார்வை என்ற உணர்வே இருந்திருக்காது." 245 இப்போது, இது ஒரு உள்ளுணர்வு. எதைக்குறித்து நீங்கள் துதித்துக்கொண்டும் களிகூர்ந்துகொண்டும் இருந்தீர்களோ, அது இங்கே தன்னை வெளிப்படுத்துகிறது, அது என்னவென்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். புரிகிறதா? இதோ அது இங்கே இருக்கிறது, இந்த வேதாகமம் இங்கே வைக்கப் பட்டிருக்கிறது, இந்த நல்ல சகோதரர்கள் குழுவும் இங்கே எல்லாரும் சுற்றிலும் இருக்கிறார்கள். "246 நாம் இருவரும் அறிமுகமில்லாதவர்கள். இப்போது கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்து வாராக. இப்போது, குணமாக்குவதற்கு, அல்லது அவளுக்கு வேண்டியதைக் கொடுப்பதற்கு... அது பணமாக இருந்தால், அது மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும், ஏனென்றால் என்னிடம் அவ்வளவாக இல்லை; ஆனால் நான் அதைச் செய்வேன்; என்னால் முடிந்த சிறந்ததை நான் செய்வேன். ஆனால்—ஆனால், இப்போது, குணமாக்க, என்னால் முடியாது. புரிகிறதா? அது அவரிடமிருந்து வர வேண்டும். ஆனால், இப்போது, உங்களைப்பற்றி அவர் என்னிடம் ஏதேனும் சொன்னால்; எனக்கு ஒன்றும் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும். உங்களைப்பற்றி அவர் என்னிடம் ஏதேனும் சொன்னால், அது உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும், அல்லவா, அவர் இங்கே இருக்கிறார் என்று உங்களை விசுவாசிக்கச் செய்யும், அல்லவா? [சகோதரி சொல்கிறார், ""ஆம். ஆம்.""] இப்போது, அவர் அதைச் செய்வாராக." 247 இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய இந்த வார்த்தைக்குச் சாட்சிகொடுக்க, இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுப்பாட்டிற்குள் நான் இப்போது எடுத்துக்கொள்கிறேன். நான் வெறுமனே... "248 இப்போது ஜெபித்துக்கொண்டிருங்கள். புரிகிறதா? ""நீங்கள் எதற்காகக் காத்திருந்தீர்கள், சகோதரர் பிரன்ஹாம்?"" என்று நீங்கள் கேட்கலாம். அந்த வெளிச்சத்தின் புகைப் படத்தை உங்களில் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? அதைத்தான் அவர்... இதோ அது, இப்போது இங்கேயே இருக்கிறது. அது இப்போது இங்கேயே இருக்கிறது. இப்போது அவள் தன்னை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தாலும், அவளால் முடியாது. இப்போது அதைச் செய்ய முடியாது. அவள் ஒரு நல்ல நபர். கவலைப்படுவதற்கு அவளுக்கு ஒன்றுமில்லை. ஏதோ நடக்கிறது என்பதையும் அவள் உணர்ந்திருக்கிறாள்." "249 ஆனால், அந்த ஸ்திரீக்கு என்ன தேவையென்றால், அவளை முடமாக்கும் ஒரு நிலைமை அவள் மேல் வந்துகொண்டிருக்கிறது, மூட்டுவலி (arthritis) அந்த ஸ்திரீக்கு வந்துகொண்டிருக்கிறது. அது சரிதான். அதுதான். புரிகிறதா? [சகோதரி சொல்கிறார், ""அது சரிதான்.""] ஆம். அது மூட்டுவலி என்பது உண்மையானால் உங்கள் கையை உயர்த்துங்கள். இப்போது நீங்கள் என்னை நம்புகிறீர்களா, அந்த மூட்டுவலி உங்களை எங்கு அதிகமாக வலிக்கச் செய்கிறது என்று என்னால் சொல்ல முடியும்? [""ஆம்.""] அது உங்கள் எலும்புகளில் இருக்கிறது. அது சரிதான். உங்களுக்கு வேறு ஏதோ ஒரு பிரச்சனையும் இருக்கிறது. அது என்னவென்று தேவனால் சொல்ல முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு கட்டி (tumor) இருக்கிறது. ஆமாம், ஐயா. அது சரிதான். உங்கள் கையை உயர்த்துங்கள். அது எங்கே இருக்கிறது என்று தேவனால் எனக்குச் சொல்ல முடியும் என விசுவாசிக்கிறீர்களா? [""ஆம்.""] அது மார்பகத்தில் இருக்கிறது. [""ஆம்.""] அது சரிதான். இப்படி உங்கள் கையை அசைக்கவும். இப்போது, பாருங்கள், அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? [""ஆம்.""] அப்படியே செல்லுங்கள், அது இனி உங்களைத் தொந்தரவு செய்யாது. சும்மா செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவு தான். புரிகிறதா? சென்று விசுவாசியுங்கள். புரிகிறதா?" 250 இப்போது, அதைப் பாருங்கள், எனக்கு அந்த ஸ்திரீயைத் தெரியாது. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கும் மேலாக, நான் எவ்வளவு நேரம் உங்களிடம் பேசினேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் பேசிய எல்லாவற்றையும் விட, அதிலிருந்து இப்போது நான் பலவீனமாக இருக்கிறேன். புரிகிறதா? "251 இப்போது இங்கே ஒரு அம்மா இருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் அறிமுக மில்லாதவர்கள் என்று நினைக்கிறேன். நமக்கு ஒருவரையொருவர் தெரியாது, ஆனால் தேவனுக்கு நம் இருவரையும் தெரியும். இப்போது, உங்களைப்பற்றி எனக்குத் தெரியாது என்று உங்களுக்குத் தெரிந்த ஏதோவொன்றை இயேசு என்னிடம் சொன்னால், நீங்கள் கேட்கப்போகிற காரியத்தில் விசுவாசம் வைக்க அது உங்களுக்கு உதவுமா? [சகோதரி சொல்கிறார், ""ஆமாம், ஐயா.""] இது இப்போது சபையாருக்கு உதவுமா? புரிகிறதா?" "252 இப்போது, நினைவில் கொள்ளுங்கள், சோதோமில் இருந்ததைப் போலவே அந்த காட்சி அமைக்கப்படும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்கிறார். நீங்கள் சோதோமைப் பார்க்கிறீர்கள்; பில்லி கிரஹாம், எல்லாவற் றையும் அதே வழியில் பார்க்கிறீர்கள். இப்போது இங்கே ஆபிரகாமின் குழுவைப் பாருங்கள், பாருங்கள், ஆபிரகாமின்—ஆபிர காமின் ராஜரீக சந்ததியை. ""கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாகிய நாம் ஆபிரகாமின் சந்ததியா யிருக்கிறோம்."" அது சரிதான், சகோதரர்களே. நாம் அனைவரும்..." "253 அது ஒரு கட்டி. அது சரிதான். அறுவை சிகிச்சை எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் ஒரு... நீங்கள் எல்லா நேரமும், அதனாலே கஷ்டப்படுகிறீர்கள். அது இப்போது உங்களை விட்டு நீங்கும் என்று விசுவாசிக்கிறீர்களா? [சகோதரி சொல்கிறார், ""ஆமென்.""] நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் விசுவாசித்தபடியே அது உங்களுக்கு ஆகும். நல்லது. இப்போது விசுவாசமாயிருங்கள். சந்தேகப்பட வேண்டாம், புரிகிறதா? விசுவாசம் வையுங்கள், அம்மா. நல்லது. அடுத்தது... இதோ போகிறது. புரிகிறதா?" "254 இப்போது நீங்கள் வாருங்கள். நீங்கள்தான் அடுத்த நோயாளி. இப்போது, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். [சகோதரி சொல்கிறார், ""ஆம்.""] நாம் அறிமுகமில்லாதவர்கள்... இதற்கு முன் நான் உங்களைப் பார்த்ததே இல்லை. நீங்கள் வெறும் ஒரு... [""என் வாழ்க்கையில் நான் உங்களைப் பார்த்ததே இல்லை.""] உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்னைப் பார்த்ததே இல்லை, என் வாழ்க்கையில் நானும் உங்களைப் பார்த்ததே இல்லை. நாம் சந்தித்த இரண்டு மனிதர்கள் அவ்வளவுதான்." 255 இப்போது இது என்ன? இது ஒரு வரம். புரிகிறதா? வரம் என்பது நீங்கள் வெட்டுவதற்கும் காரியங்களைச் செய்வதற்கும் பயன்படும் ஒரு குச்சியோ அல்லது பட்டயமோ போன்றதல்ல. வரம் என்பது—என்பது உங்களை வழியிலிருந்து விலக்கிக்கொள்வதற்கான ஒரு வழி. புரிகிறதா? நீங்கள் வெறுமனே... நான் என்னை வழியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும், அப்போது பரிசுத்த ஆவியானவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். புரிகிறதா? இது நீங்கள் எடுத்து ஏதோவொன்றைச் செய்யும் ஒன்றல்ல. இது உங்களை வழியிலிருந்து விலக்கிக்கொள்வதற்கான ஒரு வரம், அதன் பிறகு தேவன் உங்களைப் பயன்படுத்துகிறார். புரிகிறதா? உங்களை விலக்கிக்கொண்ட பிறகு... ஒரு சிறிய... 256 உங்களால் அதை விளக்க முடியாது, ஏனென்றால் உங்களால் தேவனை விளக்க முடியாது. நாம் தேவனை விசுவாசிக்கிறோம். நாம் அவரை விளக்குவதில்லை; நம்மால் முடியாது. தேவனை நீங்கள் விசுவாசத்தினால் அறிகிறீர்கள், அறிவியலினாலோ அல்லது வேறு எந்த வழியிலுமோ அல்ல. நீங்கள் அவரை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதில்லை. நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்கள். அன்பு என்றால் என்ன என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது. சந்தோஷம் என்றால் என்ன என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது. தேவனுடைய சர்வாயுத வர்க்கம் முழுவதும், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவை அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டவை (supernatural). புரிகிறதா? உங்களால் அதை நிரூபிக்க முடியாது, ஆனால் அது உங்களிடம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். புரிகிறதா? அதுதான், ஆகையால் அதை நீங்களே அறிவீர்கள். "257 அந்த அம்மா மிகவும் சோர்வ டைந்திருக்கிறார். அவளுக்கு—அவள் வாயில், வாயின் உள்ளே ஏதோ பிரச்சனை இருக்கிறது. அது சரிதான். அது சரியாக இருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். [சகோதரி சொல்கிறார், ""அது சரிதான்.""] அது புற்றுநோயாக இருக்கலாம் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். அது சரிதான்." "இப்போது நீங்கள் சொல்லலாம், ""நீங்கள் அதைக் யூகித்துவிட்டீர்கள்.""" "258 நான் அதை யூகிக்கவும் இல்லை. [சகோதரி சொல்கிறார், ""இல்லை.""] நீங்கள் அந்தக் காரியங்களை யூகிப்பதில்லை. பாருங்கள், மறுபடியும் இங்கே பாருங்கள். நீங்கள் மிகவும் நல்ல நபர். அப்பொழுது உங்களுக்கு ஏதோ நடந்தது. ஆனால் நான் வெறுமனே... இதோ, உங்களுக்கும் ஒரு கார் விபத்து ஏற்பட்டது. இல்லையா? [""அது சரிதான்.""] அது சரியாக இருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். அதைப் பாருங்கள் இப்போது, எனக்கு—எனக்கு அது தெரிந்தி ருக்காது. [""இல்லை.""] நல்லது, அப்படியானால், உங்கள் வழியில் சந்தோஷமாகச் செல்லுங்கள். தேவனை விசுவாசியுங்கள். ஆமென். அதை விசுவாசியுங்கள்." இப்போது வாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 259 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, வெளியே இருப்பவர்களே, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கத் தொடங்குங்கள். சந்தேகப்பட வேண்டாம், ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசியுங்கள். புரிகிறதா, அது அவர்தான். அது உங்கள் கர்த்தர். அவர் உங்கள் நடுவிலேயே இருக்கிறார். அங்கே இருப்பவர்களே, அதை விசுவாசிக்கிறீர்களா? 260 இப்போது, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது, உங்களுக்கு என்னைத் தெரியாது. நல்லது, அது நல்லது. இப்போது அது அப்படி ஆக்குகிறது... உங்களுக்குத் தெரியுமா, நான் இதற்கு முன்பு இங்கே வந்ததில்லை. நாம் இப்போதுதான் இந்த நகரத்தில் இருக்கிறோம். மேலும்—மேலும் உங்களுக்குத் தேவை இருக்கிறது, அல்லது அது எதுவாக இருந்தாலும் சரி. உங்களின்—உங்களின் தேவை என்ன, அல்லது அது எதுவாக இருந்தாலும் சரி என்பதை தேவனால் எனக்குச் சொல்ல முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள். இது உங்களுக்காக அல்ல. இது வேறொருவருக்காக. அது சரிதான். அது ஒரு பேரக்குழந்தை. அந்தப் பேரக்குழந்தை ஒருவித வளர்ச்சிக் குறைபாடு (retarded) உடையது. அது துல்லியமாக சரிதான். அது வேறொரு இடத்தில் இருக்கிறது. அது இங்கே இல்லை. நியூ மெக்ஸிகோ போன்ற ஏதோ... அது நியூ மெக்ஸிகோவில் இருக்கிறது. அது அங்கேதான் இருக்கிறது. செல்லுங்கள், இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 261 நாம் ஒருவருக்கொருவர் அறிமுக மில்லாதவர்கள். நாம், இது நமது முதல் சந்திப்பு. ஆனால்... நல்லது. 262 அங்கே சரியாக அமர்ந்திருக்கும் ஒரு மனுஷன், இந்தக் காரியம், இப்படிப் போகிறது, பார்த்துக்கொண்டிருக்கிறார், ஐயா, நீங்கள் வயிற்று வலியால் கஷ்டப்படுகிறீர்கள். அது சரிதான். அது எப்படிச் செய்யப்பட்டது என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டு நீங்கள் அங்கே அமர்ந்திருந்தீர்கள். அது சரியல்லவா? மேலும் உங்கள் சொந்த வயிற்றைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரியாக இருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். எனக்கு அந்த மனுஷனைத் தெரியாது, என் வாழ்க்கையில் அவரைப் பார்த்ததே இல்லை. நல்லது. நீங்கள் விட நினைக்கும் ஒரு பழக்கம் உங்களுக்கு இருக்கிறது, புகைப்பிடித்தல். அந்தப் புகைப் பிடிப்பதை நீங்கள் நிறுத்த விரும்புகிறீர்களா? நீங்கள் சிகரெட் பிடிக்கும்போது அதுதான் உங்கள் வயிற்றுப் பிரச்சினைக்குக் காரணம்; நிக்கோடின் உள்ளே சென்று, உங்கள் வயிற்றை தசைப்பிடிப்புக்கு (spasm) உள்ளாக்குகிறது. என் வாழ்க்கையில் நான் அந்த மனுஷனைப் பார்த்ததே இல்லை, இதோ அவர் இருக்கிறார். இப்போது, ஐயா, அது உண்மையாக இருந்தால், எழுந்து நில்லுங்கள். சிகரெட்டுகளை உங்களை விட்டு விலக்கிக் கண்டிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சென்று சுகமாகுங்கள். இப்போது, என் வாழ்க்கையில் நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் எதைத் தொட்டார்? அவர் எஜமானரைத் தொட்டார். 263 சொல்லப்போனால், உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த அம்மா, நேசிக்கப்பட்டவரே, அவளுக்கும் வயிற்று வலி இருக்கிறது. அது சரிதான். உங்கள் வயிற்று வலியிலிருந்து நீங்கள் குணமாக விரும்பு கிறீர்களா, அம்மா? பாருங்கள், அந்த ஆவி, இது கடைசி நாளாக இருக்கிறது. அவர்களுக்குப் பக்கத்தில், அந்த வெளிச்சம் தொங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அது சரிதான். நல்லது. அது சரிதான். இப்போது நீங்கள் செல்லுங்கள், விசுவாசியுங்கள், உங்கள் நரம்புத் தளர்ச்சி உங்களை விட்டு நீங்கும். அதுதான் உங்கள் வயிற்று வலிக்குக் காரணம். அது சரிதான். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நல்லது. 264 சொல்லப்போனால், உங்களுக்குப் பக்கத்தில், அங்கே இன்னொரு அம்மா அமர்ந்திருக்கிறார், அவளுக்கு ஒவ்வாமை (allergy) இருக்கிறது. அது சரியாக இருந்தால், நீங்கள் எழுந்து நில்லுங்கள், அம்மா. அது சரிதான். உங்கள் கால்களில் எழுந்து நின்று அதை ஒப்புக்கொள்ளுங்கள். மேலும், நல்லது, தேவன் அதை உங்களை விட்டு விலக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் கேட்பதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 265 இப்போது, என் வாழ்க்கையில் நான் அவர்களைப் பார்த்ததே இல்லை. அது சரியாக அதுவாகவே இருக்கிறது. அவர்கள் எதைத் தொட்டார்கள்? அவர்கள்—அவர்கள் தங்களு டைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியரைத் தொட்டார்கள். அங்கே வெளியே உள்ள உங்களில் எவரும், நீங்கள் அதே காரியத்தை விசுவாசிக்கிறீர்கள். வெறுமனே விசுவாசியுங்கள். 266 அங்கே அமர்ந்திருக்கும் ஒரு மனுஷனுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வேண்டும். அவரும் ஒரு வேலைக்காகத் தேடிக்கொண்டிருக்கிறார். தேவன் உங்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்து, அந்த வேலை யையும் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? இப்போது உங்கள் கையை மேலே உயர்த்துங்கள்; இங்கேயே, வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு அங்கே அமர்ந்திருக்கிறவரே. நல்லது. என் வாழ்க்கையில் நான் அவரைப் பார்த்ததே இல்லை, ஆனால் அவர் நினைத்துக்கொண்டிருந்தது சரியாக அதுவேதான். அது சரியாக இருந்தால், இப்படி உங்கள் கையை அசைக்கவும். "267 இப்போது நீங்கள் பார்க்கவில்லையா? தேவனுடைய வார்த்தை இருதயத்தின் நினைவு களையும் நோக்கங்களையும் வகையறுக்கிறது. ""இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்."" அங்கே வெளியே இருப்பவர் அவர்தான். அது நானாக இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். நான் அங்கே வெளியே இல்லை. நான் அவரிடமிருந்து இருபது கெஜம் தள்ளியிருக்கிறேன். ஆனால் அவர் பிரதான ஆசாரியரைத் தொட்டார். ஓ, கிறிஸ்து இங்கே பிரசன்னமாயிருக்கிறார் என்ற எண்ணம், நண்பரே, உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?" 268 மன்னியுங்கள், அம்மா. நான் தொடர வேண்டும், உங்களுக்குத் தெரியுமா, விசுவாசத்தின் அப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு. அது அங்கே வெளியே தொடங்கியது, இப்போது அதிலிருந்து விலகி இருப்பது கடினமாக இருக்கும், புரிகிறதா. நல்லது. நீங்கள் ஒரு விசுவாசி. உங்களுக்கு நடக்கவிருக்கும் அந்த அறுவை சிகிச்சையை, அறுவை சிகிச்சை நடப்பதற்கு முன்பாகவே தேவன் உங்களை விட்டு விலக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்களும் அதை விசுவாசிக்கிறீர்களா? மேலும், ஒருவித வைக்கோல் காய்ச்சலோ (hay fever) அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று உள்ள அந்த மகள் உங்களுக்கு இருக்கிறாள், அந்த வைக்கோல் காய்ச்சலிலிருந்து தேவன் அவளைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது. இப்போது சென்று உங்கள் கைகளை அவள் மேல் வைத்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், தேவன் அவளைக் குணமாக்குவார். விசுவாசம் வையுங்கள். "269 உங்கள் இரவு உணவைச் சாப்பிட விரும்புகிறீர்களா? [சகோதரி சொல்கிறார், ""ஆம்.""] உங்கள் வயிறு சரியாகிவிடும் என்று விசுவாசிக்கிறீர்களா? [""ஆம்.""] நல்லது, அப்படியானால் போய் சாப்பிடுங்கள். கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார். நல்லது." "270 வாருங்கள், அந்த அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். விசுவாசம் வையுங்கள். சந்தேகப்பட வேண்டாம். வாருங்கள், அம்மா. தேவன் அந்த நீரிழிவு நோயைக் குணமாக்கி, உங்களைச் சுகமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? [சகோதரி சொல்கிறார், ""ஆம், சகோதரரே.""] உங்கள் முழு இருதயத்தோடும், அதை விசுவாசிக்கிறீர்களா? [""ஆமென்.""] நல்லது, அப்படியானால் உங்கள் வழியில் சென்று, களிகூர்ந்து, உங்கள் முழு இருதயத்தோடும் ""நன்றி, கர்த்தராகிய இயேசுவே"" என்று சொல்லுங்கள்." "271 தேவன் உங்கள் முதுகு வலியைக் குணமாக்கி, உங்களைச் சுகமாக்க முடியும். அதை விசுவாசிக்கிறீர்களா? [சகோதரி சொல்கிறார், ""நிச்சயமாக.""] நல்லது, உங்கள் வழியில் சென்று, முழு இருதயத்தோடும், ""நன்றி, கர்த்தராகிய இயேசுவே"" என்று சொல்லுங்கள். நீங்கள் விசுவாசிக்க வேண்டும்." "272 வாருங்கள், அம்மா. நீங்கள் இளமை யானவர். ஆனால், இருதய நோயால் நீங்கள் எளிதில் மரிக்கலாம். ஆனால் தேவன் உங்கள் இருதயத்தைக் குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வழியில் சென்று, களிகூர்ந்து, ""நன்றி, கர்த்தராகிய இயேசுவே"" என்று சொல்லுங்கள். மேலும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நல்லது." 273 வாருங்கள், ஐயா. பதட்டமடைந்து, உங்கள் வயிற்றில் ஒரு பெப்டிக் அல்சரை (peptic ulcer) அது உங்களுக்குக் கொடுத்தது. செல்லுங்கள், உங்கள் இரவு உணவைச் சாப்பிடுங்கள். இயேசுகிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 274 தேவன் அந்த ஆஸ்துமாவைக் குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அங்கே வெளியே அமர்ந்துகொண்டு, கண்ணாடியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்; சிறிய, கட்டம் போட்ட உடையணிந்திருக்கும் அம்மா, அந்த முனையில் அமர்ந்திருப்பவரே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் அந்த ஆஸ்துமாவைப் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால் உங்கள் கையை உயர்த்துங்கள். நல்லது. அவர் உங்களைக் குணமாக்குவார். 275 ஐயா, அவருக்குப் பின்னால் சரியாக அமர்ந்திருக்கும் நீங்கள், அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்தக் கட்டி அறுவை சிகிச்சையை உங்களால் தவிர்க்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவன் அந்தக் கட்டியை எடுத்து உங்களைக் குணமாக்கி, கட்டியிலிருந்து உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது, ஐயா, நீங்களும் உங்களுடையதைப் பெற்றுக்கொள்ளலாம். புரிகிறதா? நல்லது. நீங்கள் விசுவாசம் வைத்து, சந்தேகப்படாமல் இருந்தால், தேவன் நிச்சயமாக அதைச் செய்வார். ஆமென். 276 அவர் நேற்றும் இன்றும் என்றென் றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்று உங்களில் எத்தனை பேர் இப்போது வெளியே உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்கள்? அது உயிர்த்தெழுந்த இயேசுதான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, என்னால் அதைச் செய்ய முடியாது என்று உங்களில் எவருக்கும் தெரியும். உங்களைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் அவருக்குத் தெரியும். "277 இப்போது வேதாகமமும் இதைச் சொல்கிறது. உங்களில் எத்தனை பேர் விசுவாசிகள்? உங்கள் கையை உயர்த்துங்கள். இப்போது, இயேசு விட்டுச் செல்லும்போது சபைக்குச் சொன்ன அவருடைய கடைசி வார்த்தைகள், ""நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கி யுங்கள். விசுவாசமுள்ளவனாய் ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாத வனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்."" அதை விசுவாசிக்கிறீர்களா?" 278 இப்போது எனக்காக ஒன்றைச் செய்வீர்களா? இப்போது நீங்கள் ஒருவருக் கொருவர் உங்கள் கைகளை வையுங்கள். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம், உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரின் மேல் உங்கள் கையை வையுங்கள், சுற்றிலும் அப்படியே. அதுதான். ஒருவருக்கொருவர் கையைத் தொடுங்கள் அவ்வளவுதான். நல்லது. "279 நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள், வேதாகமம் இதை உறுதியாகச் சொல்வதுபோல, குமாரன் உருவாகும்வரை ஆபிரகாம் வேறு எந்த அடையாளத்தையும் பார்க்கவில்லை. அதுதான் ஆபிரகாம் பார்த்த கடைசி அடையாளம். எப்பொழுதும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் உங்களுக்குச் சொல்கிறேன், சபையே, இதோ உங்களுடைய கடைசி அடையாளம். குமாரனின் தோற்றப்பாடு வெகு சீக்கிரத்தில் இருக்கப்போகிறது. ""நீங்கள் நினையாத நாழிகையில், அது எடுத்துக் கொள்ளப்படும்."" மக்கள் தாங்கள் இரட்சிக்கப் படுகிறோம் என்றும், எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டு பிரசங்கம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர் இருப்பார்... யோவானின் வருகையில் இருந்ததைப்போலவே, அனைவரும் தொடர்ந்து செல்கிறார்கள், காலம் கடந்துவிட்டது. நாம் நினைப்பதை விட நேரம் கடந்துவிட்டது." இப்போது உங்கள் கைகளை ஒருவருக்கொருவர் வைத்திருக்கிறீர்கள். 280 இந்த கடைசி நாட்களில் அவர் அதைச் செய்வார் என்று இயேசு வாக்குத்தத்தம் செய்த ஏதோவொன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், இதோ அவர் சரியாகத் திரும்பி வந்து அவர் சொன்னபடியே செய்திருக்கிறார். 281 இப்போது, நீங்கள் உங்களை ஒரு விசுவாசி என்று சொல்கிறீர்கள். நான் அதை நம்புகிறேன். இப்போது, நீங்கள் யாரோ ஒருவர் மீது உங்கள் கைகளை வைத்திருக்கிறீர்கள். 282 மேலும் அவருடைய பிரசன்னம் இப்போது இங்கே இருக்கிறது. இப்போது, அது அவர்தான். ஒரு மனுஷன், தன் கைகளை வேறொருவர் மீது வைத்திருக்கும்போது, இப்போதே, சரியாக அதே நேரத்தில் குணமடைவதை நான் இப்போதுதான் பார்த்தேன். புரிகிறதா? அது—அது என்ன—அது என்ன செய்ய வேண்டுமோ அதுதான். 283 ஆனால், பாருங்கள், அது லவோதிக்கேயா சபைக்காலம் நடைபெறும் நேரத்திற்கு வருகிறது. அது எழுப்புதல் நேரமாக இருந்திருந்தால், அது வெறுமனே பிரகாசித்து அப்படிச் சென்றிருக்கும். [சகோதரர் பிரன்ஹாம் தன் விரல்களைச் சொடுக்கினார்] ஆனால், பாருங்கள், அவர் சபையிலிருந்து துரத்தப் பட்டபோது அது வந்தது. நினைவிருக்கிறதா, அந்த நிலநடுக்கம் வந்த மற்றொரு நாள்? லவோதிக்கேயா சபைக்காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் சபைக்கு வெளியே நின்று, தட்டிக்கொண்டு, மீண்டும் உள்ளே வர முயற்சிக்கிறார். புரிகிறதா? அங்குதான் அது வந்திருக்கிறது, பாருங்கள். அவர் மீண்டும் வர முயற்சிக்கிறார். உங்களின்—உங்களின் ஜெபத் திற்காக அவர் உங்களோடு தன்னை அடையாளம் கண்டுகொள்ள விரும்புகிறார். 284 இப்போது, நீங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டாம். உங்கள் கைகளை யார் மீது வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கிறார்கள். புரிகிறதா? மேலும், பின்பு, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். உங்கள் சபையில் நீங்கள் ஜெபிப்பது போலவே ஜெபியுங்கள். நீங்கள் சத்தமாக ஜெபித்தால், சத்தமாக ஜெபியுங்கள்; நீங்கள் உங்களுக்குள்ளே ஜெபித்தால், உங்களுக்குள்ளே ஜெபியுங்கள். உங்கள் சபையில் நீங்கள் எப்படிச் செய்கிறீர்களோ, அப்படியே ஜெபியுங்கள். "285 மேலும் சொல்லுங்கள், ""கர்த்தராகிய இயேசுவே, நான் இப்போது உம்முடைய பிரசன்னத்தில்தான் இருக்கிறேன் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இவ்வளவு தூரம் கீழே உள்ள இந்த அரங்கத்தில், மற்றும், ஆஹா, அருகில், அல்லது புளோரிடாவின் தம்பாவில் தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் மகத்தான கர்த்த ராகிய இயேசுவே. நான் இவ்வளவு தூரம் கீழே இருக்கிறேன், இதோ நீர் இன்றிரவு இந்த அரங்கத்தில் இருக்கிறீர். நீர் இங்கிருந்தபோது உம்மேல் இருந்த அதே ஆவியோடு, அதை எங்களுக்குள் திரும்பவும் அனுப்பியிருக்கிறீர். எங்களது சொந்த விசுவாசத்தை நாங்கள் பார்த்தோம், அல்லது பிறவி வரமாக அவருக்கு அருளப்பட்ட ஒரு வரத்தின் மூலம் விசுவாசம் கொண்ட சகோதரர் பிரன்ஹாமைப் பார்த்தோம். எங்கள் யாரையும் அறியாமல், அங்கே நின்று எல்லாவற்றிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளும் விசுவாசத்தை அவர் இங்கே கொண்டிருந்தார். அவர் தன்னைத் தளர்த்திக் கொண்டதால், நீர் உள்ளே வந்து அந்த வரத்தைப் பயன்படுத்தினீர். மேலும் நீர், அவர்... நீர் அதைப் பயன்படுத்தினீர். இங்கே மேடையில், அங்கே வெளியே பார்வை யாளர்களில் முற்றிலும் அறிமுகமில்லாத மக்கள் இருந்தார்கள், அது வார்த்தையை வெளிப் படுத்தியது. தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டுள்ளது, நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராகிய அவர் வார்த்தையாகவே இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. இதோ நீர் இருக்கிறீர்! நான் உம்மை விசுவாசிக்கிறவன். நான் என் கைகளை யாரோ ஒருவர் மேல் வைத்திருக்கிறேன், அவர்கள் தங்கள் கைகளை என் மேல் வைத்திருக்கிறார்கள். இப்போது, கிறிஸ்துவின் மகத்தான பிரசன்னமே, இந்த நபரைக் குணமாக்கும்.""" 286 மேலும் நான் உங்கள் அனைவருக்காகவும் ஜெபிக்கப்போகிறேன். நான் உங்கள் அனைவருக்காகவும் ஜெபிக்கும்போது, இப்போது நீங்கள் ஒருவருக்கொருவர் ஜெபியுங் கள். நீங்கள் அனைவரும் இப்போதே குணமா வீர்கள், அதை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும். 287 பரலோகப் பிதாவே, இன்றிரவு இங்குள்ள இந்த மக்கள் கூட்டமாகிய நாமும், உம்முடைய பிரசன்னத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம், கர்த்தாவே. நமது கிறிஸ்தவ மதம் சரியானது என்பதை அது எங்களுக்கு நிரூபிக்கிறது. முகமதுவின் மதம், புத்தருடையது, மற்றும் அவர்கள் அனைவரும் இறந்து கல்லறையில் இருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் ஒரு காலியான கல்லறை இருக்கிறது, மேலும் உயிருள்ள கிறிஸ்துவாகிய நீர் இன்றிரவு எங்களோடு இங்கே இருந்து, பரிசுத்த ஆவியானவரின் நபர் மூலம் தன்னை அடையாளப்படுத்தி, எங்கள் மூலம் அசைவாடி, அவரே இந்த நேரத்திற்கான வார்த்தையாக இருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறார். இந்த நேரத்திற்கான இந்த வாக்குத்தத்தங்களை உயிருள்ளதாக்க, அவர் வார்த்தையாக இருக்கிறார். தம்மோடு அடையாளம் காணும்படி அடையாளம் காணப்பட்ட வாக்குத்தத்தத்தை அவரால் உருவாக்க முடியுமென்றால், பல ஆண்டுகளாக குணமாக்குவதைக் குறித்து அவர் செய்த வாக்குத்தத்தத்தை அவர் எவ்வளவு அதிகமாகக் காத்துக்கொள்வார்! 288 கர்த்தாவே, ஒருவருக்கொருவர் மேல் வைக்கப்பட்டிருக்கும் விசுவாசிகளின் அந்தக் கைகளைப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொ ருவரும் குணமடைய வேண்டும் என்று, கர்த்தாவே, நான் அவர்கள் சார்பாக இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். அதை அருளுங்கள். இயேசுகிறிஸ்துவின் வல்லமை அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பாய்வதாக. அவர் களுக்கு அந்த விசுவாசம் வரட்டும், அவர்கள்... இல்லை, அவர்கள் மேல் தங்கள் கைகளை வைத்திருக்கும் அந்த நபர் யார் என்று கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீர் இங்கே இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம், எங்களது விசுவாசத்தால் நாங்கள் உம்மைத் தொடுகிறோம். 289 சாத்தானே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இந்தச் சபையை விட்டு வெளியேறு. இந்த மக்கள் சென்று விடுதலையாகும்படி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இவர்களை விட்டுப் புறப்பட்டுப் போ. ஆமென். நல்லது, சகோதரரே. "290 உங்களில் எத்தனை பேர் இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் இயேசுகிறிஸ்து உங்களைச் சுகமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கால்களில் எழுந்து நின்று, ""நான் விசுவாசிக்கிறேன்"" என்று சொல்லுங்கள். நல்லது, இப்போது விசுவாசத்தின் ஜெபம் ஏறெடுக்கப்பட்டுவிட்டது. அற்புதம். நன்று. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது தீர்க்கப்பட்டுவிட்டது. ஆமென்." "291 இப்போது, இப்படி உங்கள் கைகளைக் கீழே தொங்கவிட்டபடி, கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்காமலும், அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலும் இருந்த உங்களில் எத்தனை பேர் இப்போது உங்கள் கைகளை அவரை நோக்கி உயர்த்த விரும்புகிறீர்கள்? சொல்லுங்கள், ""கர்த்தாவே, உம்முடைய பிரசன்னத்தில், நியாயத்தீர்ப்பு நாளில் என்னை நியாயந்தீர்ப்பார் என்று நான் நம்பும் அதே தேவன், அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இங்கே இருக்கிறார், நான் இப்போது உம்மை என் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்."" உங்கள் கையை உயர்த்தி, ""நான் அதைச் செய்வேன்"" என்று சொல்லுங்கள். ஆம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, நீங்கள், நீங்கள். வேறொருவரா? நீங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அற்புதம். அங்கே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறொருவரா? ""நான் என் கைகளை உயர்த்துவேன். அவர் இங்கே இருக்கும்போது நான் இப்போது அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், நான் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறேன்.""" 292 அவரை முகமுகமாய்ப் பார்க்கும் வரை, நீங்கள் இனி ஒருபோதும் இவ்வளவு நெருக்கமாக இருக்க மாட்டீர்கள். ஏனென்றால், இங்கே, வியாதியஸ்தரைக் குணமாக்குவதும், இருதயத்தின் இரகசியத்தை அறிவதுமான அவருடைய அனைத்து குணாதிசயங்களும் இப்போது இங்கேயே அடையாளப் படுத்தப்படுகின்றன. அவர் இந்த நேரத்தின் வார்த்தையாக இருக்கிறார். 293 அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது உங்கள் கைகளை உயர்த்துங்கள், வேறு யாராவது. இப்போது அவரை ஒரு இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பும் வேறு எவரும், நாங்கள் பார்க்கும்படி உங்கள் கைகளை இப்போது உயரே தூக்குங்கள். நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நன்று. சிலர், நான் நினைக்கிறேன், எட்டு அல்லது பத்து, பதினைந்து பேர் செய்தார்கள். 294 இப்போது அவர்கள் ஒவ்வொரு வருக்காகவும் நாங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் இப்போதே உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். தங்கள் கைகளை உயர்த்தியவர்களின் அருகில் நீங்கள் நின்றால், சில கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளை அவர்கள் மேல் வையுங்கள். போதகர்களில் ஒருவர் தயவுசெய்து இங்கே வாருங்கள், நீங்கள் செய்வீர்களானால், உடனே வாருங்கள். 295 இப்போது தங்கள் கைகளை உயர்த்திய அந்த ஆத்துமாக்களுக்காக போதகர்களில் ஒருவர் இப்போது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறார்.